Home தமிழகம் விதிகளை மீறி சவுடுமண் அள்ளுதலை தடுக்க கோரிக்கை

விதிகளை மீறி சவுடுமண் அள்ளுதலை தடுக்க கோரிக்கை

34
0
SHARE

பெரியபாளையம், ஆக. 24& திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே எரையூர் கிராமத்தில் விதிமுறைகளை மீறி பல ஜெ.சி.பி எந்திரங்கள் மூலம் சவுடுமண் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், கனிமவளத் துறைக்கும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே எரையூர் கிராமத்தில் கருமாத்தம்மன் கோவில் அருகே தனி நபர் ஒருவருக்கு சவுடுமண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகமும், கனிம வளத்துறையும் அனுமதி அளித்துள்ளதாகவும், இந்த அனுமதியைப் பயன்படுத்தி இக்கோவில் அருகே பல ஜெ.சி.பி. எந்திரங்களை கொண்டு, அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பல அடி ஆழத்துக்கு பள்ளங்களைத் தோண்டி சவுடு மண்ணை அகற்றிவிட்டு அதற்கு கீழே கிடைக்கும் மணலை மட்டும் இரவு பகலாக நாள்தோறும் நு£ற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றிச் செல்கின்றார்கள் என கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.

இதனால் எரையூர் கிராமத்தின் நிலத்தடிநீர் மட்டம் பாதிக்கப்படும் என்றும் பூண்டி செல்லும் சாலை குண்டுங்குழியுமாக மாறிவிட்டதாகவும், இந்தச் சாலையில் உள்ள மசூதிக்கு செல்வோரும், பொதுமக்களும் இந்தச் சாலையை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, விதிமுறைகளைமீறி பல ஜெ.சி.பி. எந்திரங்களைக் கொண்டு கோவில் அருகே சவுடுமண் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இரவுபகலாக மண் அள்ளுவதை தடை செய்யவேண்டும், இந்தப் பகுதியை கனிம வளத்துறை அதிகாரிகளும், வருவாய்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து முறைகேடாக கனிமத்தை எடுத்த அந்த தனிநபரிடம் இழப்பீட்டு தொகையை வசூலிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.