Home சினிமா கூவத்தில் குளித்த மா.கா.பா.ஆனந்த்

கூவத்தில் குளித்த மா.கா.பா.ஆனந்த்

13
0
SHARE

முழுக்க முழுக்க சைதாப்பேட்டை கூவம் பகுதியில் எடுக்கப்பட்ட படத்தில் ஹீரோ மா.கா.பா.ஆனந்த் நிஜமாகவே கூவத்தில் குளித்து நடித்திருக்கிறார்.

டைரக்டர் அமீரிடம் உதவி டைரக்டராக இருந்த எஸ்.பி.மோகன், ‘பஞ்சு மிட்டாய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் கதையை எஸ்.பி.மோகன் எழுத, ஜே.பி.சாணக்யா, எழில் வரதன், கோபாலகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார் ஆகிய 4 எழுத்தாளர்களும் சேர்ந்து திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள். சரவணன், ராஜேந்திரன் ஆகிய இருவரும் வசனம் எழுதியிருக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் எஸ்.பி.மோகன் கூறியதாவது:&

“2 சிறுகதைகளை இணைத்து இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் திருமணமான ஒரு மாதத்தில் நடக்கும் சம்பவங்களை கதையாக கொண்ட படம் இது. 2 நண்பர்களின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைவதால் ஏற்படும் நிகழ்வுகளே திரைக்கதை. ஒரு காட்சியில் ஆனந்த் எருமை மாட்டின் மீது அமர்ந்து வருவது போல காட்சி, மாட்டின் மீது ஏறி அமர்ந்தவுடன் மாடு அவரை கிழே தள்ளி விட்டது. மாட்டின் கால்களுக்கு இடையே கிடக்கிறார். நாங்கள் பயந்து போய்விட்டோம். கையில் கடுமையான அடிபட்டு விட்டது. ஆனாலும் அதோடு நடித்துக்கொடுத்தார்.

சென்னை, சிதம்பரம், திருவண்ணாமலை, புவனகிரி சுற்றுவட்டாரங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here