Home உலகம் காஷ்மீர் விடுதலை தீவிரம் அடையும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பேச்சு

காஷ்மீர் விடுதலை தீவிரம் அடையும் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பேச்சு

17
0
SHARE

இஸ்லாமாபாத், டிச.4&

காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவளிப்பதாக, பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறினார்.

பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26&11&2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர்.

166 பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவர், ஹபீஸ் சயீத். லஷ்கர்&இ&தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத் தவா என்ற பெயரில் இயக்கத்தை நடத்தி வருகிறார்.

மேலும் மில்லி முஸ்லீம் லீக் என்ற புதிய கட்சியையும் தொடங்கினார். இந்த கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் கமிஷன் இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை. இந்த நிலையில், ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த ஜனவரி மாத இறுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் ஹபீஸ் சயீத் மீதான பாகிஸ்தான் அரசின் பிடி மேலும் இறுகி உள்ளது.

அவர் தீவிரவாதிதான் என பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது பெயர் தற்போது தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பல மாதங்களாக வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த ஹபீஸ் சயீத் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மில்லி முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் என தீவிரவாதி ஹபீஸ் சயீத் அறிவித்துள்ளார்.

லாகூர் நகரின் சவ்பர்ஜி பகுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியளித்த ஹபீஸ் சயீத் கூறியதாவது:&

காஷ்மீர் விவகாரத்தில் கையாளப்பட்ட பின்வாசல் ராஜதந்திரங்கள் இதுவரை பின்னடைவைதான் தந்துள்ளது என்பதை பாகிஸ்தானுக்கு தெரிவிக்கும் அதேவேளையில், எவ்வளவு துன்பம் வந்தாலும் பரவாயில்லை. காஷ்மீர் விடுதலைக்காக போராடுபவர்களுக்கு நான் தொடரந்து ஆதரவு அளிப்பேன் என்பதை இந்தியாவுக்கு தெரிவித்து கொள்கிறேன். பாகிஸ்தானில் என்னை சிறை வைத்ததும், இந்தியாவில் ஹ§ரியத் தலைவர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கும் சர்வதேச நிர்பந்தங்கள்தான் காரணம்.

என்னை வீட்டு சிறையில் இருந்து விடுதலை செய்தது தொடர்பாக இந்தியா கோபம் அடைந்துள்ளது. காஷ்மீர் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கைவிடாவிட்டால் காஷ்மீர் போராட்டம் மேலும் தீவிரம் அடையும். அதன் பக்கவிளைவை இந்தியா சந்திக்க நேரிடும் என நான் அந்நாட்டை எச்சரிக்கிறேன் என கூறினார்.

தேர்தலில் போட்டி?

பாகிஸ்தானில் ஜமாத் உத் தாவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத். இவர் 2008&ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டார். பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசு வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது. கடந்த நவம்பரில் கோர்ட் உத்தரவுப்படி விடுதலையானார். புதிய அரசியல் கட்சி துவங்கியுள்ள சையத் 208ம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்க உள்ள பொதுத்தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் எந்த தொகுதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.