Home விளையாட்டு இலங்கை அணியின் தில்லுமுல்லு

இலங்கை அணியின் தில்லுமுல்லு

12
0
SHARE

டெல்லியில் காற்று மாசு இருப்பது உண்மைதான். ஆனால் இலங்கை அணி இதனை காரணமாக காட்டி, விளையாட மறுத்தது. அனைத்து வீரர்களும் முகத்தில் துணி கட்டி இருந்தனர். விளையாட்டை நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது.

இதை பார்த்ததும் துரிதமாக செயல்பட்ட கோலி, அணியை டிக்ளேர் செய்தார்.

இதனால் இலங்கை பேட்டிங் பிடிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டது. தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட, திமுத் கருணாகரத்னே, முகம்மது ஷமி ஓவரில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

டெல்லி கோட்லா மைதானத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அதில் குழந்தைகள் தவிர மற்றவர்கள் முகத்தை மூடியபடி அமரவில்லை. முதல்போட்டியில் இலங்கை அணி தோல்விமுகத்தில் காணப்பட்ட போது, இதே போன்ற மழை குறுக்கிட்டது. அப்போது வேண்டும் என்றே நேரத்தை கடத்தி தில்லுமுல்லுவில் ஈடுபட்டது நினைவுக் கூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here