Home அரசியல் அம்மாவின் ஆன்மா தமிழக அரசைக் காப்பாற்று அமைச்சர் பெஞ்சமின் பேச்சு

அம்மாவின் ஆன்மா தமிழக அரசைக் காப்பாற்று அமைச்சர் பெஞ்சமின் பேச்சு

49
0
SHARE

பொன்னேரி, ஆக. 24& திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டி கிராமத்தில் வரும் செப்டம்பர் மாதம் 2&ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பெஞ்சமின், மற்றும் எம்.எல்.ஏக்கள்., பொன்னேரி சிறுணியம் பலராமன், அலெக்சண்டர், விஜயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டி கிராமத்தில் வரும் செப்டம்பர் மாதம் 2&ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பெஞ்சமின், எம்.எல்.ஏக்கள் பொன்னேரி சிறுணியம் பலராமன் அலெக்சண்டர், விஜயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இவ்விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவிற்கான மேடை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. மேடை அமைக்கும் பணியை, தமிழக அரசின் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளுர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி, எம்.எல்.ஏக்கள் சிறுணியம் பலராமன், அலெக்சண்டர், விஜயகுமார் ஆகியோர் உடன் சென்று பார்வையிட்டனர்.

பொன்னேரி தாசில்தார் சுமதி, கூட்டுறவு சங்கத் தலைவர் பானுபிரசாத், இயக்குநர் பொன்னுதுரை உட்பட பலர் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்த மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நுற்றாண்டு விழாவை நடத்தி வருகின்றார்.

திருவள்ளுர் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் 2 &ந்தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட சிறப்பாக பணிகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களிடையே எந்த பிளவும் இல்லை எனவும், ஜெயலலிதாவின் ஆன்மா தமிழக அரசை காப்பாற்றும் எனவும் தெரிவித்தார்.