Home சுடச்சுட கார்வார் துறைமுக பகுதியில் 346 தமிழகமீனவர்கள்உட்பட 1247 பேர் பாதுகாப்பாக உள்ளனர் ...

கார்வார் துறைமுக பகுதியில் 346 தமிழகமீனவர்கள்உட்பட 1247 பேர் பாதுகாப்பாக உள்ளனர் இந்திய கடலோர பாதுகாப்பு படை தகவல்

35
0
SHARE

சென்னை, டிச. 4&

கார்வார் பகுதியல் தமிழக மீனவர்கள் 346 உட்பட 1247 மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என  இந்திய கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

இது குறித்து பத்திரிக்கை தகவல் அலுவலகம் பாதுகாப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கர்வார் என்ற பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 32 படகுகளும், 346 மீனவர்களும் உட்பட கேரளா, கர்நாடாக, மகராஷ்டிராவை சேர்ந்த 129 படகுகள், 1247 மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களில் மெரியா பந்தர், ரத்னகிரி, தேவ்கார்க் பகுதியில் தமிழக மீனவர்களின் 25 படகுகளும், கேரளா மீனவர்களின் 80 படகுகளும், கர்நாடகாவின் 45 படகுகளும், கோவாவின் 15 படகுகள் ஆகியவை தேவ்கார்க், மல்வான், மேரியாபந்தர், கார்வார் ஆகிய துறைமுகங்களில் இருக்கின்றன.

இந்திய கடற்படையின் விமானப்படையின் ஹெலிக்காப்டர், இந்திய கடற்படையின் கப்பல்கள் வைபவ், அப்ஹிராஜ், ஆதேஷ் ஆகியவை கடற்பகுதியில் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது

மேலும் 3 கடற்படையின் கப்பல்கள், ஒரு கடற்படை ஹெலிகாப்டர் ஆகியவை கிழக்கு பகுதியிலும் தொடர்ந்து தேடி வருவதுடன் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும் 11 கடற்படை கப்பல்கள், விமானப்படை 2 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் ஆகியவை மீனவர்கள் மீட்கும் பணியில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, லட்சத்தீவு, மினிகாய் கடற்படைப் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.