Home சம்பவம் மனைவியின் கள்ளக்காதல் தெரியவந்ததால் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவியின் கள்ளக்காதல் தெரியவந்ததால் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை

27
0
SHARE

தாம்பரம், ஆக. 24  சென்னை தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம், பூங்கா தெருவை சேர்ந்தவர் ராஜன் 31. இவர் சந்தோஷபுரம் அடுத்த விஜயநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.

இவருக்கு சீதா லட்சுமி (29) என்ற மனைவியும், ஸ்ருதிமதி (6) என்ற மகளும் வினிஷ் (5) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று காலை ராஜனின் பெற்றோர்கள் அவரது அறையின் கதவை தட்டியுள்ளனர்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ராஜன் கதவை திறக்ககாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து பார்த்தபோது ராஜன் அவரது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் ராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளுவதற்கு முன்னால் அவர் தற்கொலைக்கு காரணம் அவரது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஐவர் ராஜ் என கடிதம் எழுதிவெய்துயிருந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து போலீசார் விசாரணையில் சீதாலட்சுமிக்கும் சந்தோஷபுரம் பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்திவரும் ஐவர் ராஜ் (27) என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும் இந்த விஷயம் ராஜனுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தெரியவந்து சீதாலட்சுமியிடம் விசாரித்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சீதாலட்சுமி குழந்தைகளை ராஜனிடம் விட்டுவிட்டு கடந்த ஒரு மாதமாக இ.சி.ஆர்.யில் உள்ள பனையூரில் அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் பின்னர் சீதாலட்சுமியுடன் சேர்ந்து ஐவர் ராஜ் ராஜனை மிரட்டியதால் ராஜன் தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி இருவரையும் சிறையில் அடைத்தனர்.