Home சுடச்சுட தலபூட்டுவா யானை வேட்டை இலங்கையில் 5 பேர் கைது

தலபூட்டுவா யானை வேட்டை இலங்கையில் 5 பேர் கைது

65
0
SHARE

கொழும்பு, டிச. 3&

இலங்கையின் கல்கமுவ பகுதியில்தல பூட்டுவாஎன அழைக்கப்படும் மிகஅரிய வகை தந்தம் கொண்ட யானையை கொன்ற குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தல பூட்டுவா என அழைக்கப்படும் யானைகள் மிக அரிதாக காணப்படும். இந்தநிலையில் கல்கமுவ பகுதியில் காணப்பட்ட இந்த வகையை யாரோ மர்மநபர்கள் வேட்டையாடி கொன்றுவிட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த நிலையில், யானை தந்தங்கள் இரண்டை விற்பனை செய்யச் சென்ற இருவர் கடந்த 23&ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதைதொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தங்கள் இரண்டும் இணைந்திருப்பதே தல பூட்டுவா யானையின் சிறப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.