Home தமிழகம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாகன சோதனையில் ரூ.3.26 லட்சம் சிக்கியது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாகன சோதனையில் ரூ.3.26 லட்சம் சிக்கியது

16
0
SHARE

சென்னை, டிச. 3&

சென்னை, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையட்டி தண்டையார்பேட்டையில்  பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 3.26 லட்சம் சிக்கியது

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. இதையட்டி, பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று, தண்டையார்பேட்டை, அரி நாராயண புரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டனர்.

அதில், உரிய ஆவணமின்றி ரூ,3,26. லட்சம் இருந்ததை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பணம் கொண்டு வந்தவர் திண்டிவனம், கிருஷ்னன் தெருவை சேர்ந்த சின்னராஜ்(42) என தெரியவந்தது. இவர், தன்னுடைய மகன் திருமணத்திற்கு,  நகை துணி வாங்க,  பணத்துடன் வந்துள்ளார். தண்டையார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு, காரில் வரும் போது, சோதனையில் சிக்கினார். இதை தொடர்ந்து, ஆர்.கே.நகர் போலீசார் விசாரணைக்கு பிறகு, கலெக்டர் அலுவலக கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.