Home இந்தியா அதிபர் ட்ரம்பிடம் போனில் பேசினார் நரேந்திர மோடி

அதிபர் ட்ரம்பிடம் போனில் பேசினார் நரேந்திர மோடி

40
0
SHARE

புதுடெல்லி, டிச. 3&

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடந்தது.

இதில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மகள் இவான்கா டிரம்ப்பும் பங்கேற்கின்றனர்.

மூன்று நாள்களுக்கு நடைபெற்ற இந்த மாநாட்டில், 127 நாடுகளைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட இளம் தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர்.

நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி இந்தியா  அமெரிக்கா சார்பில் உலக தொழில் முனைவோர் மாநாடு சிறப்பாக நடந்ததற்கு பரஸ்பரம் வாழ்த்து பரிமாறிக்கொண்டதாக தெரிகிறது.