Home இந்தியா டெல்லியில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க ‘‘போக்குவரத்து நெரிசல் கட்டணம்’’ திட்டத்தைச் செயல்படுத்த முடிவு ?

டெல்லியில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க ‘‘போக்குவரத்து நெரிசல் கட்டணம்’’ திட்டத்தைச் செயல்படுத்த முடிவு ?

17
0
SHARE

புதுடெல்லி, டிச. 3&

டெல்லியில் குறிப்பிட்ட சாலைகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க லண்டன் நகரில் கடைப்பிடிக்கப்பட்டு வரும்போக்குவரத்து நெரிசல் கட்டணம்திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லியின் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில சாலைகளைக் கடக்க நான்கு சக்கர வாகனங்கள் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தடுக்க டெல்லி போலீசார் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக டெல்லி போக்குவரத்து காவல் துறை, டெல்லி பொதுப் பணித் துறை, டெல்லி மாநகராட்சி ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்துக்கு பிறகு டெல்லி காவல் துறையின் தலைமை செய்தித் தொடர்பாளர் தீபேந்தர் பதக் கூறுகையில், “டெல்லி போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கட்டணம் திட்டத்தை அமல்படுத்தலாம் என்பது குறித்தும் எந்தெந்த சாலைகளை ஒரு வழிப்பாதைகளாக மாற்றலாம் என்பது குறித்தும் விரிவாக ஆய்வு நடத்தப்படும்என்றார்.இதுகுறித்து டெல்லி காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:டெல்லி போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண போக்குவரத்து நெரிசல் கட்டண திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் செல்பாட்டுக்கு வந்தால், லண்டன், சிங்கப்பூரில் உள்ளதைப் போல் இயந்திரங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டணம் வசூலிக்கப்படும். டெல்லியில் ஏராளமான சாலைகள் இரண்டு வழிப்பாதைகளாக உள்ளன. அவற்றை ஒருவழிப் பாதையாக மாற்றி போக்குவரத்து நெரிசலைத் தடுக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும்என்றார்.‘‘போக்குவரத்து நெரிசல் கட்டணம்’’ ஓர் விளக்கம் பொதுவாக மாநகரங்களில் குறிப்பிட்ட சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்தச் சாலைகளைக் கண்டறிந்து அங்கு, போக்குவரத்து நெரிசல் கட்டணம் விதிக்கப்படும். இதனால் அந்தச்சாலையை தவிர்த்து மாற்று சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால், போக்குவரத்து நெரிசல் குறையும்.

லண்டனில் இந்தத் திட்டம் 2003ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. அதன்படி, போக்குவரத்து நெரிசல் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ள சாலைகளில் மின் வாகனங்கள், குறைவான புகையை வெளிப்படுத்தும் சிறிய வகை வாகனங்கள் இலவசமாக செல்லலாம்.மீதமுள்ள வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் கட்டணத்தைச் செலுத்திவிட்டு அந்தச் சாலைகளைப் பயன்படுத்தலாம். தடை விதிக்கப்பட்டுள்ள பெரிய வாகனங்களும், பழைமையான வாகனங்களும் அந்தச் சாலைகளில் சென்றால் அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும்.விடுமுறை நாள்களில் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படாது. இந்தத் திட்டத்தால் லண்டனின் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.