Home சுடச்சுட சேலம் மாவட்டத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்க குறுகிய பாலங்கள் கட்டமைக்கப்படும்முதல்வர் பழனிசாமி உறுதி

சேலம் மாவட்டத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்க குறுகிய பாலங்கள் கட்டமைக்கப்படும்முதல்வர் பழனிசாமி உறுதி

54
0
SHARE

சேலம், டிச. 3&

சேலம் மாவட்டத்தை போக்குவரத்து நெரிசலை குறைக்க  குறுகிய பாலங்களான செவ்வாய்ப்பட்டை பாலம், சூரமங்கலம் பாலம் மற்றும் இரட்டை அடுக்கு உயர்மட்ட பாலமான 5 ரோடு, முள்ளுவாடி கேட் இரயில்வே மேம்பாலமும்  விரைவில் கட்டமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.26.77 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட மேம்பால திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி ரா.பாஜிபாகரே,  தலைமையில் நடந்தது.இவ்விழாவில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் .வி.பன்னீர்செல்வம், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் .பி.ஆர்.சுந்தரம், கள்ளகுறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.கே.காமராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் செ.செம்மலை,ஜி.வெங்கடாசலம், .பி.சக்திவேல், பி.மனோன்மணி, எஸ்.வெற்றிவேல், எஸ்.ராஜா, ஆர்.எம்.சின்னத்தம்பி, திரு..மருதமுத்து, .கு.சித்ரா, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் .ஆர்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேம்பாலத்தினை பொது மக்கள் பயன்பாட்டிற்கு  முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்து பேச்சியதாவது :

முள்ளாள் முதல்வர் ஜெயலலிதாவிடம், சேலம் மாவட்ட மக்கள், போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்டிதர கோரிக்கை வைக்கப்பட்டது. சேலம் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று சேலம் மாவட்டத்திற்கு மேம்பாலம் அமைக்க ஜெயலலிதா ஆணையிட்டார்கள். அதன்படி மேம்பாலம் கட்டப்பட்டு இன்று உங்கள் கண்முன்னே திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மண்னைவிட்டு மறைந்தாலும் இது போன்ற திட்டங்களால் மக்களின் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளார். மேலும் ஜெயலலிதா இருந்த காலத்தில் சேலம் மாநகராட்சிப்பகுதிகளில் எந்தந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இருக்கிறதோ அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட பாலம், கீழ்மட்டபாலம், சாலைகள் அகலப்படுத்துதல் மற்றும் மாவட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி தரம் உயர்த்த கோரிக்கை வைத்தோம். அவற்றை அனைத்தையும் ஏற்றுகொண்டு திட்டங்களை நிறைவேற்ற ஜெயலலிதா  உத்தரவிட்டார்கள். இதனால் சேலம் மாவட்டம் போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் எத்தனையோ முதல்வர்கள் தோன்றினாலும் நம்முடைய சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்த ஒப்பற்ற முதலமைச்சராக ஜெயலலிதா திகழ்ந்தார்கள். மேலும், சேலம் மாவட்டம், .வி.ஆர் ரவுண்டானா உயர் மட்ட பாலமும் விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.

இதனால்சென்னைமற்றும்பெங்களூர்செல்லும்கனரகவாகனங்கள்எந்தவிதபோக்குவரத்துஇடையூரும்இல்லாமல்சேலம்இரும்பாலைபிரிவுரோடுவரைசெல்லமுடியும். சேலம் மாவட்டத்தில் குறுகிய பாலங்களான செவ்வாய்ப்பட்டை பாலம், சூரமங்கலம் பாலம் மற்றும் இரட்டை அடுக்கு உயர்மட்ட பாலமான 5 ரோடு, முள்ளுவாடி கேட் இரயில்வே மேம்பாலமும்  விரைவில் கட்டமைக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பதை இத்தருனத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  பேசினார்.