Home மற்றவை வேட்பு மனு தாக்கலின் போது விதிமீறல் டி.டி.வி.தினகரன், வெற்றிவேல் உட்பட 35 பேர்...

வேட்பு மனு தாக்கலின் போது விதிமீறல் டி.டி.வி.தினகரன், வெற்றிவேல் உட்பட 35 பேர் மீது வழக்கு

15
0
SHARE

சென்னை, டிச. 3&

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையட்டி,  வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த , டிடிவி.தினகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வெற்றிவேல், கலைராஜன் உள்ளிட்ட  35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  தேர்தல் நடத்தும் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதிக்கு, கடந்த பிப்ரவரி மாதம், இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், பணம் பட்டுவாடா பிரச்சினையில், தேர்தல் ஆணையம் , தேர்தலை நிறுத்தியது.

இதைதொடர்ந்து, மீண்டும், ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்த்தல் நடத்தப்படுகிறது. வரும், டிசம்பர் 21ம் தேதி, தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் , வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

சென்னை, தண்டையார்பேட்டை, மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம், நேற்று முன்தினம், டி.டி.வி.தினகரன் வேட்பு தாக்கல் செய்தார்.

அவருடன் வெற்றிவேல், கலைராஜன் உள்ளிட்ட 5 பேர் சென்றனர். இதை தொடர்ந்து மேலும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள்  5 பேர் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர்அவர்கள், அனைவரும் அத்துமீறி, தேர்தல் அலுவலகத்துக்குள் நுழைந்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து தேர்தல் அலுவலகம், அருகில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக கூடியதாகவும் புகார் எழுந்தது. டிடிவி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு, வெளியில் வரும்போது, .தி.மு.. வேட்பாளர் மதுசூதனன், ஆதரவாளர்களுடன் வந்தார். அப்போது டி.டி.வி.  தினகரன், அவரின் ஆதரவாளர்கள் ஆகியோரை, அந்த வழியாக செல்ல விடாமல், வேறு ஒரு இடத்தில் போலீசார் நிற்க வைத்தனர்.

அந்த இடத்திற்கு டி.டி.வி.தினகரனை ஏற்றி செல்லும் கார் வந்து நின்றது. அந்த காரில், டி.டி.வி.தினகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஏறி சென்றனர். தேர்தல் நடத்தை விதியில் 200 மீட்டர்க்கு அப்பால் தான் வாகனங்களை நிறுத்த வேண்டும். ஆனால், டி.டி.வி.தினகரன் வாகனம், தேர்தல் அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுசாமி, தண்டையார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதைதொடந்து, டி.டி.வி. தினகரன், வெற்றிவேல், கலைராஜன் உள்ளிட்ட 35 பேர் மீது 171,  143 ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சட்ட விரோதமாக கூடுதல், தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.