Home அரசியல் களத்தில் தலைவர்கள்..!

களத்தில் தலைவர்கள்..!

12
0
SHARE

குஜராத் அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது.? இந்திய மாநிலங்களில் கல்விக்கான் நிதி ஒதுக்கீட்டைப் பொருத்தமட்டில் குஜராத் 26&வது இடத்தில்தான் உள்ளது.? குஜராத் மாநில இளைஞர்கள் என்ன குற்றம் செய்தார்கள்.?

& காங்கிரஸ் துணை தலைவர்,

ராகுல் காந்தி.உத்தரப் பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதாவின் வெற்றி பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களுக்கு கிடைத்தது. ராகுலுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. அவரால் அமேதி தொகுதியை கூட காப்பாற்ற முடியாது.

& உத்தரப் பிரதேச முதல்வர்,

யோகி ஆதித்தியநாத்.மும்பை நகரம் பிற மாநிலத்தை சேர்ந்த பல மக்களுக்கு இடம் அளித்துள்ளது. அவ்வாறு இங்கு இடம் பெயர்ந்தவர்கள் மும்பையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

& மராட்டிய முதல்வர்,

தேவேந்திர பட்னாவிஸ்.மும்பை மீது மராத்தியர்களுக்கே முதல் உரிமை உண்டு. முதல்வர் பட்னாவிஸ் கூறிய கருத்து மகாராஷ்டிரத்தை அவமானம் படுத்துவது போல் உள்ளது. இந்த கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும்.

& சிவசேனா தலைவர்,

உத்தவ் தாக்கரே.