Home தமிழகம் புயலால் பாதிப்பு ஏற்படாத வகையில் காஞ்சிபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 49 சிறப்பு குழுவெள்ள தடுப்பு...

புயலால் பாதிப்பு ஏற்படாத வகையில் காஞ்சிபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 49 சிறப்பு குழுவெள்ள தடுப்பு அலுவலர் அமுதா தகவல்

17
0
SHARE

தாம்பரம், டிச. 3&

காஞ்சிபுரத்தில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 49 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வெள்ள தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அமுதா தெரிவித்தார்.

சென்னையை அடுத்த தாம்பரம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதா தலைமையில் நடைபெற்றது/ காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னயா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஆக்கிரமிப்புகன் அகற்றும் பணி மற்றும் வரும் மழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட வெள்ள தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அமுதா கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 2056 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாறு ஆறு பகுதியில் ஊரப்பாக்கம் ஆதனூர் மண்ணிவாக்கம் வரதராஜபுரம் பெருங்களத்தூர் பகுதியை முதல் கட்டமாக வைத்து பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அடையாளபடுத்தி விட்டோம். இதில் 750 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதில் குடியிருந்தவர்களுக்கு பெரும்பாக்கம் நாவலூரில் மாற்று இடம் வழங்கியுள்ளோம் வரதராஜபுரம் பகுதியில் 193 வீடுகள் அப்புறப்படுத்தபட்டுள்ளது. 20 வீடுகள் கோர்ட்டில் தடை வாங்கியுள்ளனர் திங்கள் அல்லது செவ்வாயில் கோர்ட்டில் உத்தரவு பெற்று அந்த வீடுகளும் அகற்றப்பட்டு விடும் என்றார்.

மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதைக்கு எந்த பகுதிகளிலும் தண்ணீர் தேங்கிய சூழ்நிலை இல்லை கடந்த நாட்களுக்கு பெய்த மழையினாலும்கூட எப்பொழுதும் தேங்கு இடங்களிலும் கூட தண்ணீர் தேங்கவில்லை ஆக்கிரமிப்புகளை பொறுத்தவரை 2046 நபர்களுக்கு தமிழ்நாடு குடுசைமாற்றுவாரியம் மூலம் வீடுகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் எந்தஎந்த இடங்களில் படகுகள் இருகின்றது என்று கணக்கெடுக்கப்பட்டு அவசர தேவைக்கு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டுசெல்ல தயார் நிலையில் உள்ளோம். கடந்த மழையின்போதும்கூட மூன்று படகுகள் தயார் செய்து தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெய்த்து இருந்தோம் அதற்கான தேவை அப்பொழுது இல்லை.

வரும் நாட்களில் பெரும் மழை பெய்து பாதிப்புகள் ஏற்பட்டாலும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக படகுகளை கொண்டுசெல்ல தயார் நிலையில் உள்ளோம். அதுமட்டும் இன்றி ஜெனரேட்டர் வசதிகள் மரங்கள் விழுந்துவிட்டால் அவற்றை அப்புறப்படுத்த தேவையான கருவிகள் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளோம் ஏரிகளில் ஏறக்குறைய 50 சதவீத ஏரிகள் கொள்ளளவை எட்டியிருக்கின்றது. இதில் உடைப்பு என்பது ஒருசில கடந்த நாட்களுக்கு முன்பு சில ஏரிகளில் உடைப்புகள் ஏற்பட்டு அவற்றை சரிசெய்துள்ளோம் என தெரிவித்தார்.