Home சினிமா ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்

10
0
SHARE

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்குசர்வம் தாள மயம்என்று பெயர் வைத்திருக்கிறார் ராஜீவ் மேனன் .

இந்தப் படத்தை மைண்ட் ஸ்கிரீன் சார்பில் லதா மேனன் தயாரிக்கிறார். இவர் ராஜீவ் மேனனின் மனைவியாவார் . இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். மேலும் நெடுமுடி வேணு, குமரவேல், அதிரா, சாந்தா தனஞ்சேயன், சுமேஷ், வினித் ஆகியோரும் நடிக்கவுள்ளனர் . ஜி.வி.பிரகாஷ் தற்போதுசெம’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘நாச்சியார்’, ‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்ஆகிய 7 படங்களில் நடித்து வருகிறார் . இதில்செம’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘நாச்சியார்’, ‘குப்பத்து ராஜாஆகிய 5 திரைப்படங்களின் படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடெக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன . ‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்ஆகிய 2 படங்களின் படப்பிடிப்புகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் அடுத்தப் படமாக இந்தசர்வம் தாள மயம்என்னும் படத்தில் நடிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.  இதுமட்டுமில்லாமல்ரெட்டை கொம்பு’, ‘கோபம்ஆகிய படங்களிலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ராஜீவ் மேனன், ‘பம்பாய்’, ‘குரு’, ‘கடல்ஆகிய மணிரத்னத்தின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். மேலும்மின்சாரக் கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்ஆகிய படங்களை இயக்கியவர். இப்போது 17 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்பு இந்தசர்வம் தாள மயம்படத்தின் மூலமாக மீண்டும் இயக்குநர் தொழிலுக்கு திரும்பியிருக்கிறார்.  இந்தசர்வம் தாள மயம்படத்தின் துவக்க விழா சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெற்றது.  இந்தத் துவக்க விழாவில் படத்தின் தயாரிப்பாளர் லதா மேனன், இயக்குநர் ராஜீவ் மேனன், நாயகன் ஜி.வி.பிரகாஷ், நாயகி அபர்ணா பாலமுரளி, ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், சைந்தவி பிரகாஷ் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here