Home விளையாட்டு குத்துச்சண்டை தேசிய பார்வையாளர் பதவி மேரி கோம் திடீர் விலகல்

குத்துச்சண்டை தேசிய பார்வையாளர் பதவி மேரி கோம் திடீர் விலகல்

12
0
SHARE

புதுடெல்லி, டிச. 2&

இந்திய குத்துச்சண்டை தேசிய பார்வையாளர் பதவியில் இருந்து மேரி கோம் விலகி உள்ளார்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் குத்துச்சண்டை போட்டியின் தேசிய பார்வையாளர் பதவியில் இருந்தார். விளையாட்டுத்துறை செயலாளர் இன்ஜெட்டி ஸ்ரீநிவாஸ் மேரி கோம் உட்பட 12 பேரை பார்வையாளர்களாக நியமனம் செய்திருந்தார்.

வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கும் போது கூடுதல் பதவியான பார்வையாளர்களாக இருக்கக் கூடாது என்ற விதி உள்ளது. அதனை மீறி இந்த பதவியில் யாரும் இருக்க கூடாது என விளையாட்டுத் துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெளிவாக அறிவித்தார்.

இதையடுத்து ஐந்தாவது முறையாக ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற மேரி கோம் பார்வையாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் பேசுகையில், ‘பார்வையாளர் பதவியை 10 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தேன். ராஜ்யவர்தன் சிங் ரத்தோரிடம் ஆலோசனை செய்த பிறகே இந்த முடிவை எடுத்தேன். இந்த பதவியை எனக்கு கொடுத்த போது நான் மறுப்பு தெரிவித்தேன். தேவையில்லாத பிரச்சனைகளில் ஈடுபடுவதை நான் விரும்ப வில்லைஎன மேரி கோம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here