Home விளையாட்டு களத்தில் வம்பிழுப்பது யார்? ஆன்டர்சன், ஸ்மித் வார்த்தை மோதல்

களத்தில் வம்பிழுப்பது யார்? ஆன்டர்சன், ஸ்மித் வார்த்தை மோதல்

14
0
SHARE

அடிலெய்டு, டிச. 2&

சர்வதேச கிரிக்கெட்டில் ஆன்டர்சன், ஸ்மித் வார்த்தை மோதல் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வென்று ஆஸ்திரேலியா 1&0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் களத்தில் ஆஸ்திரேலியர்களின்கோணங்கித் தனங்களைஆன்டர்சன் பத்திரிகை ஒன்றில் விமர்சித்து கட்டுரை எழுதி இருந்தார்.

இந்த கட்டுரை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் வாசிக்கும்படி இருந்தது. இந்த கட்டுரை குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பதில் அளித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:&

நானும் அந்தக் கட்டுரையை வாசித்தேன். இதனை ஜிம்மி ஆன்டர்சன் கூறுவதுதான் வேடிக்கை. எங்களை பெரிய வசைபாடிகள் என்று அவர் கூறியிருக்கிறார். இதனை வேடிக்கையாகதான் பார்க்கிறேன்.

உள்ளபடியே, நேர்மையாகக் கூற வேண்டுமெனில் கிரிக்கெட்டின் மிக மோசமான ஸ்லெட்ஜர் ஆண்டர்சன் தான். 2010&ல் அவர் என்னையே ஸ்லெட்ஜிங் செய்தார், இந்த நிலையில் அவர் ஸ்லெட்ஜிங் பற்றி பேசுவது சுவாரசியமாக உள்ளது.”

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

ஆன்டர்சன் கட்டுரையில், ஆஸ்திரேலிய அணியினர் ஆதிக்கம் செலுத்த முடியாத போது கமுக்கமாக இருப்பார்கள். இதுதான் பிரிஸ்பனில் முதல் 3 நாட்களில் நடந்தது, திடீரென 4&ம் நாள் அவர்கள் பக்கம் ஆட்டம் செல்லும்போது, தங்களின் சேட்டைகளை ஆரம்பித்து விட்டனர் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here