Home சுடச்சுட எங்களை கலந்து ஆலோசிக்காமல் செயல்படும்தமிழக முதல்வரை மாற்ற வேண்டும்

எங்களை கலந்து ஆலோசிக்காமல் செயல்படும்தமிழக முதல்வரை மாற்ற வேண்டும்

35
0
SHARE

சென்னை, ஆக. 23& ஆளுநரிடம் டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.ஏல்.ஏ.க்கள், தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆளுநரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த ஆறு மாதங்களாகப் பிரிந்து செயல்பட்டுவந்த அ.தி.மு.க.வின் இரு அணிகளும் நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஒன்றாக இணைந்தன. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கப்பட்டனர். பின்னர் மாநில துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில்  காலை 10.30 மணிக்கு 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே முதல்வரை மாற்றவேண்டும் என்று மனு அளித்தனர். இது றித்து தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு, கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா இல்லை என்றால் இந்த அரசு கிடையாது. அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த பொழுது 132 எம்.எல்.ஏ.க்கள், ஆதரவு தரவேண்டிய இடத்தில் அன்றைக்கு தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்டு அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.

இதன்காரணமாக 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினோம். ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வை ஊழல் அரசு என்றும் அரசை கண்டித்து ஆகஸ்ட் 15ம் தேதி கோட்டை முன் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கழகத்திற்கு எதிராக செயல்பட்டவர், இரட்டை இலையை முடக்கியவர், ஆட்சியை கலைக்க வேண்டும் என நினைத்தவர், கட்சியை அழிக்க வேண்டும் என நினைத்தவர்.

அந்த பேரபட்டவருக்கு எதற்காக அமைச்சர்களை அனுப்பி சமாதானம் பேச வேண்டும் ஏன் துணை முதல்வர் பொறுப்பை தரவேண்டும்.

உங்களுக்கு ஆதரவு கொடுத்த எம்.எல்.ஏக்களிடம் ஏன் யாரும் பேசக்கூட வரவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பில் உங்களுக்கு வாக்களித்த எம்.எல்.ஏக்களை நீங்கள் ஏமாற்றிவிட்டீர்கள். சசிகலாவை கட்சியிருந்து நீக்குகிறோம் என்று கூறியது மிகவும் வேதனையளிக்கும் விதமாக உள்ளது.

கட்சித் தொண்டர்கள் அனைவரும் வேதனையில் உள்ளனர். எனவே, முதல்வர் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை.

எங்களுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சென்று முதல்வரை மாற்றுவதற்கான வேலையை செய்ய உள்ளோம் என ஆளுனரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.