Home மற்றவை டிசம்பர் 10&ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் தகவல்

டிசம்பர் 10&ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் தகவல்

14
0
SHARE

திருவள்ளூர், டிச. 2&

திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 10&ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து வரும் 10&ம்தேதி தனியார் துறையில் வேலைவாய்ப்பு  முகாம் மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனப் பல்கலைக்கழகம், அடையாளம்பட்டு வளாகத்தில் நடைபெறவுள்ளது. முகாமில் சுமார் 75 வேலையளிப்பவர்கள் பங்கேற்க உள்ளனர்.  இந்நிகழ்ச்சி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் 8&ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறும், விருப்பம் உள்ள வேலையளிப்பவர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அலுவலகத்தையோ அல்லது 044&27660250 மற்றும் 9444151351 என்ற தொலைபேசி எண்களையோ தொடர்பு கொண்டு பயனடையலாம்.

இம்முகாம் நடைபெறுவது தொடர்பாக வரும் 5&ம் தேதி மாலை 5 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வேலையளிப்பவர்கள் தவறாது கலந்துகொள்ளுமாறும் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி கேட்டுக்கொண்டுள்ளார்.