Home தமிழகம் கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: முதல்வர் பழனிசாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்விழாக்கோலம் பூண்டது

கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: முதல்வர் பழனிசாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்விழாக்கோலம் பூண்டது

409
0
SHARE

கோவை, டிச.2

கோவையில் நாளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை விழாவின்போது பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், எம்.ஜி.ஆர். பற்றிய குறும்படமும், அவர் நடித்த திரைப்படங்களும் கிராமப்புறங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை கொண்ட விளம்பர வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டுள்ளன. அதேவேளையில் அந்தந்த மாவட்டங்களில் அனைத்து அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கண்கவர் அரங்கங்கள் அமைக்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில்  28வது மாவட்டமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வ..சி மைதானத்தில்  எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா  03.12.2017 நாளை ஞாயிற்றுக்கிழமை) அன்று மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர்எடப்பாடி மு.பழனிசாமி பங்கேற்று எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, ரூ.691.69கோடி மதிப்பிலான 37 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.1328.95கோடி மதிப்பில் 39 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 36,988 பயனாளிகளுக்கு ரூ.118.83கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்க உள்ளார்கள்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கவும், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகிக்கவும் உள்ளார்கள். மக்களவை துணைத் தலைவர் டாக்டர்.மு.தம்பிதுரை சிறப்புரை ஆற்றுவார்கள்.

மேலும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவைத்துணைத்தலைவர்

பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலை வகிப்பார்கள்.

இவ்விழாவில் அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா, கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், .பி.நாகராஜன், சி.மகேந்திரன், சி.கோபாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்.கே.அர்ச்சுனன், .கே.சின்னராஜ், வி.சி.ஆறுகுட்டி, எட்டிமடை ஏ.சண்முகம், ஆர்.கனகராஜ், கஸ்தூரி வாசு, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி புதுடெல்லி மற்றும் வாரியத் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிப்பார்கள்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர்.கிரிஜா வைத்தியநாதன் வரவேற்புரையாற்றுவார்கள். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் த..ஹரிஹரன் நன்றியுரையாற்றுவார்கள்.

பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை எம்.ஜி.ஆர் புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாண்புமிகு  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  அறிவுரையின் பேரில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.