Home சுடச்சுட தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் எச்சரிக்கை

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை மையம் எச்சரிக்கை

16
0
SHARE

சென்னை, நவ.30& தென் தமிழகத்தில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுப்பெற்று கன்னியாக்குமாரிக்கு தென் கிழக்கே சுமார் 50 0கி.மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை பகுதியில் இன்று (30&ந் தேதி) குமரிக்கடல் பகுதியில் நிலைக்கொள்ளக்கூடும்.

அடுத்து வரும் இரு தினங்களில் தென் தமிழகமான தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரிரு இடங்களில் மிதமாக மழைபொலிவு இருக்கும். கன்னியாக்குமாரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். கன்னியாக்குமாரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடற்பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ கற்றடிக்கும். இந்த பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலுக்குள் மீன்பிடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.