Home சினிமா கலை நிகழ்ச்சி நடத்த முன்பணம் பெற்ற வழக்கில்

கலை நிகழ்ச்சி நடத்த முன்பணம் பெற்ற வழக்கில்

21
0
SHARE

திருப்பூர் கோர்ட்டில் நடிகர் பாலாஜி  ஆஜர்கலை நிகழ்ச்சிநடத்துவதற்காக,வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பும், தனியார் செக்யூரிட்டி ஊழியர்களிடம் இருந்து ரூ. 5 லட்சம், முன்பணம்  பெற்ற வழக்கில், திருப்பூர் கோர்ட்டில் நடிகர்  பாலாஜி நேற்று ஆஜரானர்.

திருப்பூரில் கடந்த 2014ம்  ஆண்டு, வங்கி ஏ.டி.எம்மில்  பணம்  நிரப்புவதில் தனியார் செக்யூரிட்டிஊழியர்கள்  மோசடியில் ஈடுபட்டதாக  செக்யூரிட்டி நிறுவன மேலாளர் பரதன் திருப்பூர் போலீசாரிடம் புகார்  அளித்தார்.

புகாரை பெற்ற போலீசார், விஷ்ணுவர்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின், பரதனிடம் தீவிர  விசாரணை மேற்கொண்டதில், ஏ.டி.எம்.மில்பணம் நிரப்புவதில் மோசடி செய்தும், மோசாடி  செய்த பணத்தில் கலை நிகழ்ச்சி நடத்த,விஜய்  டிவி நடிகர் பாலாஜியிடம் ரூ.5 லட்சம் முன்பணம்  கொடுத்ததும்  தெரியவந்தது.

இதற்கான  விசாரணை, திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற  எண்.1 ல் நேற்று  நீதிபதி சிவகவியரசு  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்த  வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி பாலாஜிக்கு   சம்மனம் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்துநேற்று  பாலாஜி  நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த  நீதிபதி வழக்கை, அக்டோபர் மாதம் 10ம்  தேதி வழக்றகி ஒத்தி  வைத்து உத்திரவிட்டார்.