Home தமிழகம் இந்தியாவின் முதல் பங்கு வர்த்தக நிறுவனம் 5 பைசா.காம்

இந்தியாவின் முதல் பங்கு வர்த்தக நிறுவனம் 5 பைசா.காம்

9
0
SHARE

சென்னை, நவ. 29& இந்தியாவின் முதல் பங்கு வர்த்தக நிறுவனம் 5 பைசா.காம் துவக்கப்பட்டுள்ளது. தேசியப் பங்குச் சந்தையில் இடம் பெறுவது குறித்த அறிவிப்பினை 5பைசா.காம் முறையாக அறிவித்துள்ளது. ஐ.ஐ.எப்.எல். பங்கு வர்த்தக நிறுவனத்தில் தற்போதைய பங்காளர்களுக்கு இப்புதிய 5பைசா.காமின் ரூ.10 முக மதிப்புள்ள பங்குகள் 25:1 என்ற விகிதத்தில் விற்கப்படுகிறது.

ஐ.ஐ.எப்.எல். குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான நிர்மல் ஜெயின் இதுபற்றி கூறுகையில், “உயர்தர நிர்ணய அளவுகள் மற்றும் வர்த்தக அறநெறிகளைக் கடைபிடித்து இயங்கி வருகிற ஐ.ஐ.எப்.எல். குழுமத்தின் செயல்முறைகளுக்கு இணங்க 5பைசா.காம் செயல்படும். வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை மிகச் சிக்கன விலையில் அளிக்கும் 5 பைசா நிறுவனம் பங்குச் சந்தை வெளியீட்டுப் பட்டியலில் முதன்முதலாக இடம் பெற்றுள்ளது.

முழுமையான வெளிப்படைத் தன்மை மற்றும் முறைவழியான செயல்முறைகள் ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன. 5பைசா.காம் நிறுவனப் பங்குகளை வாங்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனம் சார்ந்த முதலீட்டாளர்களுக்கு தேவைப்படுகின்ற வெளிப்படைத் தன்மையுடன் இந்நிறுவனம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்தார்.

5பைசா.காம் முதன்மை செயல் அலுவலர் பிரகாஷ் கக்தானி இதுபற்றி கூறுகையில், “வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் ஒட்டுமொத்த முறையையும் மக்கள் மயப்படுத்தி, தாள் வழி விண்ணப்பம் ஏதுமின்றி, எளிமையான முறையில், மிகக் குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கான தனிப்பட்ட சேவையை வழங்குவதில் 5பைசா.காம் முத்திரை பதித்துள்ளது. கணினி வழியில் இயங்கும் நிதி சார்ந்த முழுமையான சந்தையாக இதனை உருவாக்குவதே எங்கள் குறிக்கோளாகும்.

பங்குகள் மட்டுமின்றி பரஸ்பர முதலீடு, காப்பீடு, பத்திரங்கள், தனி நபர் கடன்கள், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை, பல்வகை நிறுவன சேவைகள் மற்றும் விளிம்பு நிலை வர்த்தகம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே தளத்தில் வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு 5பைசா.காம் ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது. எங்கள் கனவுகளை நனவாக்குவதற்கு இந்த பங்குச் சந்தை வெளியீடு சிறந்த வாய்ப்பினை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.