Home சுடச்சுட அரியலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாதமிழக முதல்வர், துணை முதல்வர்  பங்கேற்பு

அரியலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாதமிழக முதல்வர், துணை முதல்வர்  பங்கேற்பு

30
0
SHARE

அரியலூர், ஆக. 23& அரியலூரில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அரியலூர் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில், தமிழக அரசு சார்பில்  இன்று மாலை நடைபெறும். எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவுக்கு, தமிழக சட்டமன்ற சபாநாயகர் ப.தனபால் தலைமை வகிக்கிறார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார்.

அரசின் தலைமை கொரடா, சட்டமன்ற உறுப்பினர், அ.தி.மு.க., அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் முன்னிலை வகிக்கிறார்.

எம்.ஜி.ஆர்., உருவ படத்தை திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசுகின்றனர். நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றும் இவ்விழாவில், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயங்கொண்டம் ஜெ.கே.என். ராம ஜெயலிங்கம், குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசுகின்றனர்.அரியலூர் மாவட்ட ஆட்சியர் க.லெக்ஷ்மி பிரியா நன்றி கூறும் இவ்விழாவில்,  திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், செல்லுவர் ராஜூ, சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன், நிலோபர் கபில், வளர்மதி, தங்கமணி, ஜெயக்குமார், அன்பழகன், துரைக்கண்ணு, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், வாரிய தலைவர்கள், அரசுத்துறை செயலாளர்கள், இயக்குநர்கள், பல்வேறு துறைகளின் இணை மற்றும் துணை இயக்குநர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகேஷ்வரி, நகராட்சி ஆணையர் வினோத் உள்பட மாவட்ட அளவிலான அலுவலர்கள் அரசியல் பிரமுகர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.அரியலூர் மாவட்ட ஆட்சியர் க.லெக்ஷ்மி பிரியா மேற்பார்வையில் நடைபெறும் இவ்விழாவுக்கான அடிப்படை பணிகளை, மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், உதவி அலுவலர்கள் சரவணன், சிவக்குமார், ஆர்.டி.ஓ., மோகனராஜன், தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரியலூர் வருகையை முன்னிட்டு, அரியலூர் நகரம் முழுவதும் சாலைகள் புதுப்பிக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில், போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசின் தலைமை கொரடா தாமரை எஸ்.ராஜேந்திரன் உத்தரவ படி, அ.தி.மு.க., நிர்வாகிகள் பிரேம்குமார், கல்லங்குறிச்சி பாஸ்கர், மோகன் உள்ளிட்டோர் ஏற்பாட்டின் படி, அரிய லூர் மாவட்டம் மற்றும் நகரம் முழுதும் டிஜிட்டல் தட்டிகள், பேனர்கள், அலங்கார வளைவுகள், வண்ண விளக்குகள் அமைக்கும் பணியும் நடைபெற்றுள்ளது. தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு, அரியலூர் நகரமே விழா கோலம் பூண்டுள்ளது.