Home விளையாட்டு டேபிள் டென்னிஸ் தொடர் இந்திய வீரர் சத்யன் சாம்பியன்

டேபிள் டென்னிஸ் தொடர் இந்திய வீரர் சத்யன் சாம்பியன்

9
0
SHARE

அல்மெரியா, நவ.29& டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சத்யன் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். ஸ்பானிஷ் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் போட்டிகள் ஸ்பெயினின் அல்மெரியா நகரில் கடந்த 22&ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஜி.சத்யன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர், இறுதிப் போட்டியில் ஜப்பானின் காஸ§ஹிரோ யோஷிமுராவை எதிர்கொண்டார். இறுதிப்போட்டியின் முதல் செட்டை  சத்யன் 11&7 என கைப்பற்றினார்.

அடுத்த செட்டை ஜப்பான் வீரர் 3&11 என்ற கணக்கில் வென்றார். இதனால் ஆட்டம் 1&1 என சமனானது. அடுத்த செட்டை சத்யன் 11&6 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜப்பான் வீரர் நான்காவது செட்டை 6&11 என கைப்பற்றினார்.அதன்பின் சுதாரிப்புடன் விளையாடிய சத்யன் அடுத்த இரண்டு செட்டையும் 13&11, 11&7 என கைப்பற்றினார். இதன்முலம் 4&2 என்ற புள்ளிக்கணக்கில் வென்ற சத்யன், தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here