Home அரசியல் ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை விஜயகாந்த் அறிவிப்பு

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை விஜயகாந்த் அறிவிப்பு

24
0
SHARE

சென்னை, நவ. 29& ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்இது குறித்து சென்னை, விமானநிலையத்தல் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரை என்னுடைய ஆதரவு யாருக்கும் கிடையாது. ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை ஒரு தேர்தலாக என்னிடம் கேள்விகள் கேட்கக்கூடாது.

செவிலியர்கள் போராட்டம் தொடர்பாக இருநாட்களாக டி.வி. பார்க்காததால் எனக்கு தெரியவில்லைஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பவர்கள் மட்டுமே கண்டனம் தெரிவிப்பார்கள்ஆளும் கட்சியில் உட்கட்சி பிரச்சனை அதிகமாகி வருவதால் அவர்கள் மக்கள் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை.

பள்ளி மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை மேற்கொண்டிருப்பது இந்த ஆட்சியின் அவலநிலையை காட்டுகிறது. இதனை நான் கண்டிக்கிறேன் என்று தெரிவித்தார்.