Home சுடச்சுட மிலாடி நபியை முன்னிட்டு மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மிலாடி நபியை முன்னிட்டு மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

22
0
SHARE

சென்னை, நவ. 29& டிசம்பர் 2ம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளை மற்றும் பார்கள் அனைத்தும் மூட வேண்டும் எனவும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

வருகிற 2ம் தேதி மிலாடி நபி தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை விதிகள் 2003, விதி12ன் படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1981 விதி 25 2() ஆகியவைகளின்கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்து பார்கள், எப்.எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்.எல்3 உரிமம் கொண்டு ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்() உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றை தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தவறினால், மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.