Home அரசியல் டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த 3 எம்.பி.க்கள் முதல்வருடன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த 3 எம்.பி.க்கள் முதல்வருடன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

51
0
SHARE

சென்னை, நவ.28 & டி.டி.வி. தினகரன் அணியில் இருந்த 3 எம்.பி.கள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை திடீரென சந்தித்தனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி அணியில் ஏற்கனவே 34 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 8 மாநிலங்களவை உறுப்பினர்களும், 111 சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழகத்தில் உள்ளனர். டி.டி.வி.தினகரன் அணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேரும், 20 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர் என தேர்தல் ஆணையத்தின் இறுதி தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பினை கடந்த 23&ந் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த தீர்ப்பில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி அணிக்கு அளிக்கப்படுகிறது என உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை என 5  மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வரும் 5&ந் தேதி ஜெயலலிதா நினைவு நாள்  ஊர்வலம் குறித்து ஆலோசனை நடத்தினார். அமைதி ஊர்வலம், அன்னதானம் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வீட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், டி.டி.வி.  தினகரனின் ஆதரவு எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், புதுச்சேரி எம்.பி.கோகுலகிருஷ்னன் ஆகியோர் வந்தனர்.

இது குறித்து எம்.பி.நவநீதகிருஷ்ணன்  கேட்டதற்கு, அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அங்கு தான் இருப்பேன். நான் எந்த அணியையும் சேராமல் நடுநிலையுடன் தான் இருந்தேன். அப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துக் கொண்டு தான் இருந்தேன் எனத் தெரிவித்தார்.