Home தமிழகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில்4,373  மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி: அமைச்சர் வழங்கினார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில்4,373  மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி: அமைச்சர் வழங்கினார்

19
0
SHARE

உத்திரமேரூர், நவ. 26&

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,373 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினைகளை அமைச்சர் பென்ஜமின் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் 9 மேல்நிலைப்பள்ளி  மாணவ/மாணவிகளுக்கு 1,313 விலையில்லா மடிக்கணினிகளையும், பின்னர் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரங்கத்தில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 3,060 மாணவ/மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளையும் அமைச்சர் பா.பென்ஜமின் வழங்கினார்.

அப்போது பேசிய அமைச்சர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய திட்டங்களில் மாணவ/மாணவிகளிடையே கல்விப் புரட்சியை உண்டாக்கிய திட்டம்தான் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம். முன்பெல்லாம் பள்ளியில் படிக்கும்போது அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றபின் அந்த வகுப்பில் படித்த பழைய மாணவர்களின் புத்தகங்களை வாங்கி படித்தது அந்தக் காலம். ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் மாணவர்கள் கல்வி கற்பதில் எந்த சிரமமும் இருக்ககூடாது என்பதை கருத்தில்கொண்டு 16 வகையான திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார். தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகள், அனைத்து வசதிகளையும் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் தேர்ச்சி  சதவீதமும், அரசுப்பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் திறமைமிக்க ஆசிரியர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஆசிரியர்கள் தங்கள் பணியை புனிதமானதாக கருதி பணியாற்றுவதால் அரசும் மாணவர்களுக்கு தேவையான  அனைத்து வசதிகளையும் எந்தவித தடையுமின்றி கல்வி கற்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவதால் மாணவர்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.

மாணவர்களின் கல்வியறிவு முன்னேற்றத்திற்கு மடிக்கணினி முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் பல உலக சம்பவங்களை இருந்த இடத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. பணம் படைத்த குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமின்றி ஏழையெளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் கல்வியறிவு பெறுவதில் சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் இந்த சீரிய சிறப்புமிக்க திட்டத்தை செயல்படுத்தி கல்விப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மாணவர்கள் அனைவரும் தமிழக அரசின் திட்டங்களின் பயனறிந்து செயல்பட்டு கல்வியில் சிறந்து விளங்கி முன்னேற்றம் கண்டு ஒவ்வொரு மாணவனும் ஒரு இலட்சிய குறிக்கோளுடன் செயல்பட்டு எதிர்காலத்தில் உன்னத நிலையை அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம்,  மைதிலி திருநாவுக்கரசு, முதன்மை கல்வி அலுவலர் ர.திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலகள், தலைமை ஆசிரியர்கள், மாணவ/மாணவியர் திரளாக பங்கேற்றனர்.