Home சுடச்சுட டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவை பயணம்

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவை பயணம்

28
0
SHARE

சென்னை, ஆக. 23& டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.ஏல்.ஏ.க்கள் புதுவை சென்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று நேற்று காலை ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதனை தொடந்து நேற்று மாலை டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் திடீரென புதுவையில் உள்ளதனியார் தங்கும் விடுதிக்கு சென்றனர்.இது குறித்து செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன், எந்த அரசியல் நோக்கமும் இல்லாமல் தான் புதுச்சேரிக்கு செல்கிறோம். நாங்கள் எங்கு இருந்தாலும் எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். புதுச்சேரி சென்றால் தான் கிடைக்கும் என்பது இல்லை. எனவே ஓய்வு எடுப்பதற்காக செல்கிறோம். அடுத்த அணியில் இருந்தும் எம்.எல்.ஏக்கள் வருவார்களா என்ற கேள்விக்கு, இப்பொழுது சூழ்நிலையில் ஒன்றும் சொல்ல முடியாது பொறுத்து இருந்து பாருங்கள் என்றார்.