Home தமிழகம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையின் சக்தியை நிரூபிப்போம்முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையின் சக்தியை நிரூபிப்போம்முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

22
0
SHARE

சென்னை, நவ. 26&

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் இரட்டை இலையின் சக்தியை நிரூபிப்போம் என்று ராமநாதபுரத்தில் முதல்வர் கூறினார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

எம்.ஜி.ஆருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடும் பொழுது நமக்கு இரட்டை இலை இல்லை. அது தேர்தல் ஆணையத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது. நாங்கள் கடந்த 25 மாவட்டத்திற்கும் செல்கின்றபோது, இந்த இரட்டை இலையை காணமுடியவில்லை. காட்டக்கூடாது என்றுதேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.  இப்போது வருகின்ற வழிநெடுகிலும் தொண்டர்களும், பொதுமக்களும் இரட்டை இலையை ஏற்றி முக மலர்ச்சியைக் காட்டினார்கள், இந்த இரட்டை இலையை எந்தக் கொம்பனாலும் தடுத்து நிறுத்தமுடியாது.

எம்.ஜி.ஆர் கண்டெடுத்த இரட்டை இலை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்டிக்காத்த இரட்டை இலை, ஒன்றரை கோடி அ.தி.மு.. தொண்டர்களுடைய உயிர்மூச்சாக விளங்கக்கூடிய இரட்டை இலை நமக்கு கிடைத்திருக்கிறது என்பதை இந்த மாவட்ட மக்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள். இன்னும் சிலர் தெரிவிக்கின்றார்கள், இந்த இரட்டை இலை போனாலும் பரவாயில்லை, அதை நம்பி நாங்கள் இருக்கவில்லை என்று சொல்கிறார்கள். பிறகு ஏன் இவர்கள் போராட்டம் செய்யவேண்டும், விட்டு விடுங்களேன்.

ஆனால் அதற்கு மனமில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு, சதி செய்து, இந்த இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நம்முடைய எதிரிகளோடு கூட்டு சேர்ந்து, சதி செய்து, கழகத்தை அழிக்கப் பார்த்தார்கள், இந்த இரட்டை இலையை முடக்கப் பார்த்தார்கள். ஆனால் எல்லாம் வல்ல இறைவன் அருளால், மேலே இருந்து இருபெரும் தெய்வங்கள் நமக்கு அருளாசி வழங்கி, நல்ல தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கி நமக்கு இரட்டை இலையை தந்திருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்திலே பேசுகின்றபொழுது, எனக்குப் பின்னாலும், .தி.மு.. பல நூறாண்டு காலம் இந்த ஆட்சி அதிகாரத்திலே நிலைத்து நிற்கும் என்று லட்சிய வார்த்தையை குறிப்பிட்டார்.  அதை நிரூபிக்கின்ற விதத்திலே  இன்றையதினம் தர்மத்திற்கு கிடைத்த வெற்றி, நீதிக்கு கிடைத்த வெற்றி, இந்த வெற்றியின் மூலம் நமக்கு இரட்டை இலை கிடைக்கப்பெற்றிருக்கிறது. மறைந்த முதல்வரின் கோட்டையாக விளங்குகின்ற தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலின் மூலமாக, இந்த இரட்டை இலைக்கு எவ்வளவு சக்தி இருக்கின்றது என்று நாம் நிரூபித்துக் காட்டுவோம்.

இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்குவோம், எதிரிகளை களத்திலே வீழ்த்துவோம், .தி.மு.. தான் தமிழகத்திலே என்றைக்கும் ஆட்சி அதிகாரத்திலே இருக்கும் என்பதை தேர்தல் மூலமாக நிரூபித்துக் காட்டுவோம். இந்தத் தேர்தல் மட்டுமல்ல, இதற்குப்பிறகு வருகின்ற உள்ளாட்சி தேர்தலானாலும் சரி, நாடாளுமன்ற தேர்தலானாலும் சரி, எந்த தேர்தல் வந்தாலும் தொண்டர்களோடு உழைத்து, பொதுமக்களுடைய ஆதரவோடு நாம் வெற்றிப் பாதையிலே செல்வோம். இவ்வாறு பேசினார்.