Home உலகம் அண்மையில் ராணுவ புரட்சி: ஜிம்பாப்வே அதிபராக எமர்சன் பதவியேற்பு

அண்மையில் ராணுவ புரட்சி: ஜிம்பாப்வே அதிபராக எமர்சன் பதவியேற்பு

20
0
SHARE

ஹராரே, நவ.25&

அண்மையில் ராணுவ புரட்சி ஏற்பட்ட ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக எமர்சன் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் 1980&ம் ஆண்டு முதல் ஜானு பி.எப் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த கட்சி சார்பில் முதலில் பிரதமராகவும், 1987&ம் ஆண்டுக்கு பின்னர் அதிபராகவும் ஜிம்பாப்வேயை ஆண்டு வந்தவர் ராபர்ட் முகாபே (93).

அப்பொழுது  துணை அதிபராக எமர்சன் நங்கக்வா (75) பதவி வகித்து வந்தார்.

சுமார் 37 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய முகாபே, தனக்குப் பின் தனது மனைவி கிரேஸ் முகாபேவை ஆட்சியில் அமர்த்தும் நோக்கில் காய்களை நகர்த்தி வந்தார். எனவே கிரேஸ§க்கு போட்டியாளராக கருதப்படும் துணை அதிபர் எமர்சன் நங்கக்வாவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியில் இருந்து நீக்கினார்.

இதனால் ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. முகாபேக்கு எதிராக ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தினர். ஆனால் முகாபே மற்றும் கிரேஸ§க்கு ஆதரவளிக்காதவர்களுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடப்பட்டன.

தனது பாதுகாப்பை கருதி எமர்சன், ஜிம்பாப்வே நாட்டை விட்டு வெளியேறினார்.

இதன் காரணமாக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வந்தது. இந்த நிலையில், ராணுவம் அதிரடியாக செயல்பட்டு கடந்த 15&ம் தேதி முகாபேயின் அதிகாரங்களை பறித்து, அவரை வீட்டுக்காவலில் வைத்தது.

அவரிடம், பதவி விலகுமாறு ராணுவமும், எதிர்க்கட்சி தலைவர்களும் வலியுறுத்திய நிலையில், மக்களும் அதிபருக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடினர். மேலும் முகாபேயிடம் இருந்த கட்சித்தலைவர் பதவியும் கடந்த 19&ம் தேதி பறிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் தொலைக்காட்சியில் தோன்றி பரபரப்பு உரை நிகழ்த்தினார்.

இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு அதிகரிக்கவே, முகாபே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைதொடர்ந்து எமர்சன் புதிய அதிபராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் நாடு திரும்பினார். தொடர்ந்து அவர் நேற்று புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த அதிபர் மாற்றம் காரணமாக ஜிம்பாப்வேயில் அடுத்த ஆண்டு தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

ஜிம்பாப்வே தெருக்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி அதிபராக பதவியேற்ற எமர்சன் நங்கக்வா மற்றும் ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவென்கா ஆகியோருக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.