Home சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பு பாலிஸ் செய்து விற்க முயன்ற 27.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்2...

அரக்கோணத்தில் பரபரப்பு பாலிஸ் செய்து விற்க முயன்ற 27.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்2 அதிகாரிகள் உட்பட 4 பேர் கைது

21
0
SHARE

அரக்கோணம், நவ. 25&

அரக்கோணத்தில் தனியார் மில்லில் பாலிஷ் செய்து விற்பனை செய்ய முயன்ற 27.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 அதிகாரிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

அரக்கோணத்தை அடுத்த அமீர்கான்பேட்டை என்ற இடத்தில் திருவேங்கடம் மார்டன் ரைஸ்மில் உள்ளது. இதன் உரிமையாளர் தெய்வசிகாமணி. இங்கு அதிக அளவில் ரேசன் அரிசியை பாலிஸ் செய்து வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ஜீவானந்தம் தலைமையில் அதிகாரிகள்  கடந்த சில நாட்களாக இரவு பகல் விடாமல் கண்காணித்தனர்.

அதன் பேரில் நேற்று அதிகாலை ஒரு லாரி அந்த மில்லுக்குள் நுழைந்தது. அது குறித்து ரகசியமாக விசாரித்ததில் அது அரக்கோணம் இந்திய உணவு பாதுகாப்பு கிடங்கிலிருந்து பள்ளிப்பட்டு  நுகர்வோர் பாதுகாப்பு கழகத்திற்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையட்டி அதிரடியாக அந்த மில்லை சோதனையிட்டனர்.

அப்போது லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை அங்கிருந்த பாலிஸ் மிசினில் கொட்டிக்கொண்டிருந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே தடுத்து நிறுத்தினர். மொத்தம் 550 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அதன் மொத்த எடை 27.5 டன் என தெரியவந்தது.

இதையட்டிஅங்கிருந்தமில்உரிமையாளர்தெய்வசிகாமணிமற்றும்லாரிடிரைவர்குமரவேலுஆகியோரைபிடித்துவிசாரித்தபோதுஇந்தகடத்தலுக்குஉடந்தையாகஇருந்தபள்ளிப்பட்டுநுகர்வோர்பாதுகாப்புகழகமேலாளர்திருமால், உதவி மேலாளர் கணேசன், லாரி உரிமையாளர் சதீஷ் மற்றும் ராஜன் ஆகியோர் என்பது தெரிந்தது.

இதையடுத்து கணேசன், திருமால் என்று 4 பேரையும் கைது செய்து தப்பி ஓடிய சதீஷ்.ராஜன் இருவரை தேடி வருகின்றனர்.