Home விளையாட்டு 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் அபாரம் இலங்கை 205 ரன்னில் ஆல் அவுட்

4 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் அபாரம் இலங்கை 205 ரன்னில் ஆல் அவுட்

17
0
SHARE

நாக்பூர், நவ.25&

இந்தியா, இலங்கை அணிகள் மோதிய 2&வது டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்னில் ஆல் அவுட் ஆனாது. தமிழகத்தில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா  இலங்கை இடையிலான 2&வது டெஸ்ட் கிரிக்கெட் நாக்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி இலங்கை அணியின் சமரவிக்ரமா, கருணரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சமரவிக்ரமா 13 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து திரிமன்னே களம் இறங்கினார். கருணரத்னே உடன் இணைந்து திரிமன்னே மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் எவ்வளவு பந்தை எதிர்கொள்ள முடியுமோ அவ்வளவு பந்தை எதிர்கொண்டனர்.

இந்திய பந்து வீச்சாளர்களும் சளைக்காமல் பந்து வீசினார்கள். இலங்கை அணி 25 ஓவரில் 44 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது 58 பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் திரிமன்னே அஸ்வின் பந்தில் க்ளீன் போல்டானார்.

3&வது விக்கெட்டுக்கு கருணரத்னே உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இலங்கை 27 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. கருணரத்னே 21 ரன்னுடனும், மேத்யூஸ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்த பின்னர் இருவரும் தொடர்ந்து ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மேத்யூஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

இந்தியவீரர்கள்

4&வது விக்கெட்டுக்கு கருணரத்னே உடன் சண்டிமல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. கருணரத்னே 51 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். 5வது விக்கெட்டுக்கு சண்டிமல் உடன் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார்.

தேனீர் இடைவேளை வரை இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. சண்டிமல் 47 ரன்னுடனும், டிக்வெல்லா 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் டிக்வெல்லா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய சண்டிமல் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 57 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இலங்கைஅணி 79.1 ஓவரில் 205 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், இசாந்த் சர்மா மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. கே.எல். ராகுலும், முரளி விஜயும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், இந்தியா 11 ரன்கள் எடுத்திருந்தது. ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்திருந்த ராகுல், லகிரு பந்துவீச்சில் அவுட் ஆனார். முரளி விஜய், புஜாரா ஆகியோர் தலா 2 ரன்னில் களத்தில் உள்ளனர். 2&வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.