Home இந்தியா தக்காளி விலை கிடுகிடு

தக்காளி விலை கிடுகிடு

15
0
SHARE

புதுடெல்லி, நவ.25&

டெல்லியில், சில்லறை விலை சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், நாட்டின் தக்காளி உற்பத்தியில் பகுதிகளில் ஒன்றான பெங்களூருவில் கிலோ ரூ.45 முதல் 50 க்கு விற்பனையாகிறது.

மிசோரம் மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.95 முதல் 100 வரை விற்கப்படுகிறது. கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதே தக்காளி விலை கடுமையாக உயர்ந்ததற்கு காரணம் என தக்காளி வியாபாரிகள் கழக தலைவர் அசோக் கவுசிக் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் மட்டும் 90 சதவீதம் தக்காளி செடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், மீண்டும் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு 15 முதல் 20 நாட்கள் ஆகும். இதனாலேயே தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.