Home சிறப்புச் செய்திகள் முடங்கிப்போன இணையதளங்கள்

முடங்கிப்போன இணையதளங்கள்

21
0
SHARE

இரட்டை இலை சின்னம், மதுசூதனன் அவைத்தலைவராக உள்ள, .தி.மு..வுக்கு சொந்தம் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இரட்டை இலை சின்னம் யாரிடம் இருந்தால் என்ன, மக்கள் வாக்களிக்க வேண்டுமே. இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.. பொதுச் செயலாளர் மறைந்த ஜெயலலிதா பர்கூரில் போட்டியிட்டு தோற்று போனார் என்பதை மறந்துவிட்டார்கள்..

  தேர்தல் ஆணையத்தில் தீர்ப்பில் இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்ட அ.தி.மு..வுக்கு 111 எம்.எல்..க்கள் மட்டுமே ஆதரவு இருப்பதாக தெளிவாக கூறியுள்ளது.

சபாநாயகர், பேராவூரணி எம்.எல்.. இருவரையும்  சேர்த்தால் கூட 113 எம்.எல்.. தான் ஆதரவு இருக்கும்.  பெரும்பான்மை பெற குறைந்தபட்சம்  117 எம்.எல்..க்கள்  ஆதரவு இருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புப்படி எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.. அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

இனிஅ.தி.மு.. அரசை கலைப்பதுபற்றி  ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். பார்ப்போம் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று ஆதங்கத்துடன் பேசினார் தாத்தா.

தமிழகஅரசின்துறைகள்வாரியாகஉருவாக்கப்பட்டபெரும்பாலானதற்காலிக

இணையதளங்கள் பல நாட்களாக முடங்கி கிடப்பதால் துறைகள் வாரியாக பல்வேறு பணிகள் தேங்கியுள்ளன.வருவாய், பொதுப்பணி, கல்வி, மருத்துவம், நிதி, கருவூலம் உட்பட அனைத்து துறைகளிலும் விண்ணப்பப் பதிவு, சான்றிதழ், விவரங்கள் பதிவேற்றம், உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது, முடிவுகள் வெளியீடு, கட்டணம் செலுத்துவது உட்பட பல்வேறு அவசர தேவைகளுக்காக, ஒவ்வொரு துறைக்கும் தலா 10க்கும் மேற்பட்ட தற்காலிக இணைய தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவைசென்னையில்உள்ளதகவல்தொகுப்புமையசர்வர்கட்டுப்பாட்டில் உள்ளன. பல நாட்களாக, இவ்வகை இணையதள செயல்பாடு பாதித்துள்ளதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் சம்பள நிலுவை பெறுவதற்கானவெப் பே ரோல்வெளியிடப்படவில்லை.  தலைமையாசிரியர்களுக்கான சம்பள பட்டியல் விவரம் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.

மேலும்கர்ப்பிணிகளுக்கானஉதவிதொகைபதிவு, தேசிய வருவாய் திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) பதிவு, கல்வி தகவல் தொகுப்பு  பதிவு, மூவகை சான்றிதழ், கல்வி உதவி தொகை பதிவுகள் தேக்கமடைந்துள்ளன. ஏழாவது சம்பள கமிஷன் தொடர்பான சம்பளபில்பதிவேற்றம் செய்ய முடியாமல், கருவூல பணிகளும் தேக்கமடைந்துள்ளன. இதனால் 15 நாட்களாக பல்வேறு துறைகளின் பணிகள் முடங்கி கிடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதைப்பற்றி எல்லாம், அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கவலை இல்லை என்று ஒரு இளைஞர் ஆதாரத்துடன், தகவல்களை தாத்தாவிடம் கொடுத்தார்.. தாத்தா.. வெரிகுட் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தட்டி கொடுத்தார்.

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு பேரணியை  தொடங்கி வைக்க  சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், துறை செயலர், ராதாகிருஷ்ணன் இருவரும் வந்தார்கள். அப்போது, முதுநிலை பயிற்சி டாக்டர்கள், 100க்கும் மேற்பட்டோர், ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். அவர்கள், அமைச்சர் மற்றும் செயலரை முற்றுகையிட்டனர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் இருந்து, அவர்களை வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன. அதையடுத்து, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து தப்பி சென்றார்கள்..

   மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 556 டாக்டர்களுக்கு பணி ஆணை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில், நான்காவது நாளாக, உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை; கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஆவேசமாக அமைச்சரிடம் தெரிவித்தார்கள்.. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர், அலட்சியமாக பதில் சொல்லாமல் போய்விட்டார், தாத்தாவை பார்க்க வந்த டாக்டர் புலம்பினார்.

தாத்தா..சிரித்துக் கொண்டே பாதிக்கப்பட்ட டாக்டர்கள் அனைவரும் வசூல் செய்து, பெரும் தொகையை ஆர்.கே நகர் தேர்தல் செலவுக்காக கொடுங்கள். நல்ல பலன் கிடைக்கும் என்றார். டாக்டர் உள்ளிட்ட இளைஞர்கள் அனைவரும் சிரித்து விட்டார்கள்..

பின்னர் பாட்டி தந்த காபியை சாப்பிட்டு விட்டு அனைவரும் கலைந்தனர்.