Home மற்றவை கால்நடை வளர்ப்போர் கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக்கொள்ள வேண்டும் கலெக்டர் ஹரிஹரன் தகவல்

கால்நடை வளர்ப்போர் கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக்கொள்ள வேண்டும் கலெக்டர் ஹரிஹரன் தகவல்

28
0
SHARE

கோவை, ஆக. 23& கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி தவறாது போட்டுக்கொள்ளுமாறு கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் “தேசிய கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசித்திட்டத்தின்” கீழ் மார்ச் 2017ஆம் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு பன்னிரண்டாவது சுற்று தடுப்பூசிப்பணி முடிவடைந்துள்ளது. தற்பொழுது 2017 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 21 நாட்களுக்குள் பதிமூன்றாவது சுற்று தடுப்பூசிப்பணி தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள 100 இலட்சம் எண்ணிக்கை பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு போடப்படவுள்ளது. அங்கிருந்து ஒவ்வொரு பணிக்கென பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசிக்குழுவினர் மூலம் குளிர் சங்கிலி முறையில் ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது உள்ள அனைத்து பசுவினம் மற்றும் எருமையினங்களை கணக்கிட்டு, அவ்வினத்திற்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 100 சதவீதம் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும். கால் மற்றும் வாய் (கோமாரி) நோயானது, குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்குபொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு. எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு கடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம். மேலும், இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்நோய் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது என்றார்.