Home உலகம் இந்தியபயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்டிரம்ப் மகள் இவாங்கா பேட்டி

இந்தியபயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்டிரம்ப் மகள் இவாங்கா பேட்டி

24
0
SHARE

வாஷிங்டன், நவ.24&

இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா தெரிவித்து உள்ளார்.

நியூயார்க் நகரில் இவாங்கா பேட்டியளித்த போது, உள்ளடக்கிய வளர்ச்சிக்காக இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.  இந்திய பயணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்திய பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்திக்க மறுபடியும் ஆவலாக இருக்கிறேன்.

இந்த தொழில் முனைவோர் மாநாட்டில் முதல் முறையாக அதிகளவில் பெண்கள் கலந்து கொள்ள உள்ளது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் பங்கேற்க உள்ள 127 நாடுகளில் சுமார் 52.5 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள் தொழில் முனைவோராக இருந்து வருகின்றனர்.” என்றார்.

சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு வரும் 28ம் தேதி ஐதராபத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.