Home சுடச்சுட தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி திட்டங்கள்மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்

தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி திட்டங்கள்மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்

47
0
SHARE

சென்னை, நவ. 24&

தமிழகத்திற்கு ரூ.1லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான பணி செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத்துறை, துறைமுகத்துறை மற்றும் நீர்மேலாண்மை திட்டங்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் டிடிகே சாலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது.

மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வகித்தனர். இதில் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய மற்றும் மாநில உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது:

மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் தமிழக முதல்வர் தலைமையிலான நெடு சாலைத்துறை, கப்பல்த்துறை மற்றும் நீர்மேலாண்மை குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில அரசுகளின் பெருவாரியான கோரிக்கையினை ஏற்று மத்திய அரசு செய்துதர தயாராக உள்ளது.

தாம்பரத்திலிருந்து வண்டலூர் வரையிலும், வண்டலூரிலிருந்து கூடுவாஞ்சேரி வரையிலும், சாலைகள் அகலமாக்கப்படும். சென்னை போக்குவரத்து நெரிசலைக்கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் திட்டங்கள் நிறைவேற்றப்படும். இந்தியாவின் முதல் நீண்ட எக்ஸ்பரஸ் நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரிலிருந்து திண்டிவனம், திருச்சியிலிருந்து சிதம்பரம், சென்னையிலிருந்து திருப்பதி உள்பட தமிழகம் முழுவதிலும் 432 சாலைகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் நீதி ஒதுக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படும்.

மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வுகான மத்திய அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பூம்புகார், சின்னமுட்டு உள்ளிட்ட இடங்களில் மீனவத்துறைமுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

கோதாவரி, கிருஷ்ணா, காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் திட்டங்கள் குறித்து அந்தந்த மாநிலங்களுடன் பேசி நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும். கோதாவரி ஆற்றிலிருந்து ஆண்டிற்கு 3000 டி.எம்.சி தண்ணீர் தேவையற்று கடலில் கலக்கிறது. அதை தமிழகத்திற்கு கொண்டுவரும் பணி நிச்சயம் நடைபெறும். ஆனால் இதற்கான திட்டவரைவு இன்னும் தயார்செய்யப்படவில்லை. விரைவில் அனைத்தையும் தயார்செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநில அரசும் நீர்மேலாண்மைகுறித்த திட்டங்கள் இருப்பின் மத்திய அரசு நிச்சயம் அதை பரிசீலனை செய்யும்.

இவை அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ரூ.1லட்சம் கோடிக்கும் மேலானது.

நெடுஞ்சாலைத்துறைப்பொறுத்தவரையில் அனைத்துத்திட்டங்களும் இன்னும் 3 மாதங்களுக்கு செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2ஆண்டுகளுக்குள் முழுமையான அளவு திட்டங்கள் நிரைவுற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநில அரசு வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டுள்ளது. என்று தெரிவித்தார்.

தமிழகத்துக்கு முதல்முறை அதிக திட்டங்கள்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், மத்திய அரசிடமிருந்து இவ்வளவு திட்டங்களை ஒரே முறையில் பெருவதென்பது இதுவே முதல்முறையாகும். தமிழக அரசு முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளை சீர் செய்வதாகவும், நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்துவதாகவும் உறுதி அளித்ததுள்ளார்கள். சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் விரைந்து செல்லும் விதமாக எலக்டாரனிக் முறையில் சுங்கம் வசூழிக்கும் முறைக்கும் ஏற்படு செய்யப்பட உள்ளது.

சென்னையில் பெய்த மழைநீர் தாழ்வானபகுதிகள் தேங்கும் படி உள்ள இடங்களின் மீது நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு சார்பில் உறுதியளித்துள்ளனர். குறிப்பாக அத்திக்கடவு அவினாசித்திட்டத்தின் மீது பரிசீலனை, கோதாவரி நீரை தமிழகத்திற்கு திருப்புதல், மதுரை, கோயமூத்தூர், சேலம் ஆகிய இடங்களில் மார்டன் பேருந்து நிலையம் அமைத்தல், தூத்துக்குடி துறைமுகத்தினை மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. என்று தெரிவித்தார்.