Home தமிழகம் ‘இரட்டை இலை’ சின்னம் கிடைத்ததால் தமிழகம் முழவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

‘இரட்டை இலை’ சின்னம் கிடைத்ததால் தமிழகம் முழவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

13
0
SHARE

சென்னை, நவ. 24&

.தி.மு.கவின் பெயர், கொடி,சின்னம் மற்றும் அதிகாரபூர்வ கடிதம் ஆகியவற்றை தமிழக முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னிர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு செய்து டெல்லி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து அதையடுத்து தமிழகம் முழவதும் அ.தி.மு.. தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பகண்டைகூட்ரோடு

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோட்டில்  ரிஷிவந்தியம் ஒன்றிய அதிமுக சார்பில்  ரிஷிவந்தியம் ஒன்றியசெயலாளர் சி.அருணகிரி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் பேரவை பாலமுருகன், ஒன்றிய துணைசெயலாளர் அன்பரசன், முன்னாள் தலைவர் அலமேலு கொளஞசியப்பன், கூட்டுறவு இயக்குனர் சின்னராஜ், மாவட்ட தொழிற்பிரிவு செயலாளர் வாணாபுரம் மணிகண்டன், சித்தால்ஆனந்தன், மண்டல பொறுப்பாளர் மாரிமுத்து, நாகுல்குடி குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் அதேபோல் தொழுவந்தங்கல் கிராமத்தில் ரிஷிவந்தியம் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

சிதம்பரம்

கடலூர் மேற்கு மாவட்டம் சிதம்பரத்தில் சட்டமன்ற உறுப்பினர் கே..பாண்டியன் தலைமையில் வடக்கு வீதியில் உள்ள மாவட்ட கழக அலுவலத்தில் வெடிவெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.நிகழ்ச்சியில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகாசி, நகர கழக செந்தில்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜவகர், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி, அவைத்தலைவர் சேகர், உள்ளிட்ட நிர்வாகிகள்ற்றுற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பொன்னேரி

இந்திய தேர்தல் ஆணையம், கடந்த மார்ச் 22&ந்தேதி அ.தி.மு..வில் பிளவு ஏற்பட்டு இரண்டு பிரிவாக செயல்பட்டதால் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. இதையடுத்து வழக்கு நடந்து வந்த நிலையில் நேற்று ஒ.பி.எஸ், .பி.எஸ் ஆகிய இரு பிரிவினரும் இரட்டை இலையைப் பயன்படுத்தலாம் என்றும், .தி.மு.க என அழைக்கவும் உத்திரவிட்டது. இதனைத் தொடர்ந்து பொன்னேரியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்..வுமான சிறுணியம் பலராமன் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார். தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் பானுபிரசாத், ஒன்றிய செயலாளர் மோகன வடிவேல், கூட்டுறவு சங்க இயக்குநர் பொன்னுதுரை, கூட்டுறவு சங்க தலைவர்கள் தத்தை அருள், சம்பத், ஒன்றிய பேரவைச் செயலாளர் திருமலை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் உட்பட 500&க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கோவிலூர்

முதல்வர் பழனிசாமி  துணை முதல்வர் ஓ.பி.எஸ்.அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை அடுத்து  .தி.மு..வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருக்கோவிலூரில்  எம்.ஜி.ஆர். சிலைக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு,தலைமையில் மாலை அனிவித்து மறியாதை செலுத்தபட்டது.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இதில் நகர செயலாளர் சுப்புரமணியன்,ஒன்றிய செயலாளர் ஏ,பி, பழனி,மாநில பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.பார்தசாரதி.பேரவை செயலாளர் தேவியகரம் சேகர்.முன்னாள்மாவட்ட கவுன்சிலர் எஸ்,தங்கராஜ்,முன்னாள் நகர செயலாளர் என்.ஆறுமுகம்.முன்னாள் மாவட்ட கவுன்சில் இளங்கோவன்.மணம்பூன்டி ஒன்றிய செயலாளர் பழனிசாமி.நகர பொருளார் சபி.வக்கில் கே.உமாசங்கர்.போலீஸ் அருணகிரி.முன்னாள் மாவட்ட கவுன்சிலர்,ஏசுபாதம்.முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்.அசோக்குமார்.மேலவ பிரநிதி ஆர், வண்டுமுருகன்,எடையூர் பழனி.காடுவெட்டி சுபாஷ், தொழில்நுட்பபிரிவு சி,ஆர்.எஸ்.பாலாஜி. ,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்,

நாகர்கோவில்

.தி.மு.க வின் சின்னமான இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ் & . பி.எஸ் அணிக்கு வளங்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அ.தி.மு..வினர் பட்டாசுகள் வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருப்பூர்

இரட்டை இலை சின்னம்  அதிமுகவின் முதல்வர் அணிக்கு  ஒதுக்கப்பட்டதையடுத்து, திருப்பூர் மாநகர  மாவட்ட செயலாளரும், முன்னாள்  அமைச்சருமான ஆனந்தன் கழக தொண்டர்களுடன்நேற்று எம்.ஜி.ஆர் சிலைக்கு  மாலை  அணிவித்து மரியாதை  செலுத்தினார்.

குடியாத்தம்

.பி.எஸ்., .பி.எஸ். அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதையட்டி குடியாத்தம் நகர செயலாளர் பழனி  தலைமையில் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் தனஞ்செயன், மூர்த்தி, மாயா பாஸ்கர்,தேவராஜி, மகாலிங்கம், சுந்தரேசன், சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் இரட்டை இலை சின்னம் கட்சி ஆகியவற்றை மீண்டும் பெற்ற மகிழ்ச்சியில் அ.தி.மு.கவினர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தலைவர்கள் சிலைக்கு மாலை  அணிவித்தும் கொண்டாடினர்.

கள்ளக்குறிச்சியில் உள்ள அ.தி.மு..வின் மாவட்ட தலைமை அலுவலகத்தில்,மாவட்ட செயலாளர் இரா.குமார குரு தலைமையில் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து  இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி எம்.பி.காமராஜ்,சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு, மாவட்ட அ.தி.மு..அவைத்தலைவர் எஸ்.பச்சையாப்பிள்ளை, கள்ளக்குறிச்சி ஒன்றிய அ.தி.மு..செயலாளர் ஏ.எஸ்..ராஜசேகர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர்கள் சுப சந்திரன், கலைவாணன் , வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஏ.ஆர்.பிரபு, பி.வெங்கடேசன், பி.சேகர்,மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற நிர்வாகிகள் தங்கபாண்டியன்,.ரங்கன்,.குபேந்திரன்,நகர நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, .முருகன், ஆறு.வெங்கடேசன்,குட்டி என்கிற கருணாநிதி, முத்துராமன் உட்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

திருவள்ளூர்

இரட்டை இலை சின்னம் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணியினருக்கு வழங்கப்பட்டது. இதனால் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணித் தொண்டர்கள் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் நகர மன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் எஸ்..நேசன், லோகநாதன், செந்தில்குமார், நரேஷ்குமார் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

கடம்பத்தூர் ஒன்றியம் மணவாள நகரில் ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமையில் கழக நிர்வாகிகள் பி.நடராசன், லோகநாதன், இன்பநாதன், ஞானகுமார், வலசை பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டு  பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினார்கள்.

பூண்டி ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமையில்  பட்டாசுகள்  வெடித்து இனிப்புகள் வழங்கினார்கள்.அம்புரோசு, கோவிந்தசாமி, வேலகாபுரம் சம்பத், மாம்பாக்கம் வெங்கடேசன், வெங்கடாசலம், மாசிலாமணி, சீனன், கோபி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

திருவள்ளூர் ஒன்றியம் சார்பில் ஈக்காடு கிராமத்தில் ஒன்றிய செயலாளர் புட்லூர் சந்திரசேகர் தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டன. ஜீவா, சுப்பிரமணியன், ஜான்சன், நந்தகுமார், இமயவர்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேப்பூர்

.தி.முகவின் அதிகார புயர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை இந்திய தேர்தல் கமிசன் ஈபிஎஸ் ஒபிஎஸ் அணிக்கு வழங்கியதை நல்லூர் ஒன்றிய அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் அ.தி.மு.. நல்லூர்  வடக்கு ஒன்றிய செயலாளர் பச்சமுத்து தலைமையில்   வேப்பூர் கூட்ரோட்டில் பட்டாசு வெடித்தும்   பேருந்து பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்  இதில் நல்லூர் வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளும் ஊராட்சி மற்றும் கிளை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திட்டக்குடி 

.தி.மு.கவில் முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு பெரும்பாண்மை உள்ளதால் இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி அணிக்கு ஒதுக்கிடு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது திட்டக்குடியில் அதிமுகவினர் இந்த அறிவிப்பினை வரவேற்று பஸ்நிலையம் நெடுஞ்சாலை கடைவீதி பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் வெடிகள் வெடிக்கப்பட்டன கடலூர் மாவட்ட அதிமுக செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மங்களுர் ஒன்றிய அதிமுக செயலாளர் கே.பி.கந்தசாமி திட்டக்குடி நகர செயலாளர் நீதிமன்னன் விவசாய கூட்டுறவு சங்க தலைவர் முல்லைநாதன் கூட்டுறவு வீடு கட்டுவோர் சங்கத் தலைவர் மதியழகன் நகர பேரவை செயலாளர் செல்வராசு ராஜ.வெங்கடேசன் முத்து உட்பட அனைத்து நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆம்பூர்

ஆம்பூர் நகர கழக செயலாளர் மதியழகன் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஓ..ஆர் திரையரங்கம் அருகில் இருந்து  ஊர்வலமாக வந்து நகர காவல் நிலையம் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொன்டாடினர். இதில்  தேவலாபுரம் வெங்கடேசன். முன்னாள் நகரமன்ற துனை தலைவர் நஜர் முஹம்மத்.நகர மன்ற உறுப்பிணகள் கராத்தே மணி .சீனிவாசன் .சரவனன் .நகர கழக இனை செயலாளர் லலிதாஅன்பரசன் .உள்பட  பலர் கலந்து கொன்டனர்.

திருத்தணி

இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ்,&.பி.எஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை திருத்தணியில் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பட்டாசு வெடித்து நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

இரட்டை இலைச் சின்னம் மீண்டும் வழங்கியதை கொண்டாடும் வகையில் திருத்தணி ஒன்றிய அ.தி.மு.க சார்பில் கோ.அரி எம்.பி அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை ரவி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் தாலுகா கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயசேகர்பாபு, நகர துணைச் செயலாளர் கேபிள் சுரேஷ், எச்.டி வங்கி தலைவர் டி.எம்.சீனிவாசன், .எஸ்.பாலாஜி, ஒன்றிய பொருளாளர் கோ.தாமோதரன், வேலஞ்சேரி பழனி, சுரேஷ், ராகவேந்திரன், கொண்டாபுரம் பிச்சாண்டி உட்பட பலர் கலந்துகொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here