Home தமிழகம் சேகர்ரெட்டியுடன் தொடர்பு இல்லை என நிரூபிப்பாரா?ஸ்டாலினுக்கு சைதை துரைசாமி சவால்

சேகர்ரெட்டியுடன் தொடர்பு இல்லை என நிரூபிப்பாரா?ஸ்டாலினுக்கு சைதை துரைசாமி சவால்

33
0
SHARE

சென்னை, நவ.23&

மு..ஸ்டாலினுக்கும் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இல்லை என்று அவர் நிரூபிப்பாரா என்றும், மு..ஸ்டாலின் மீதான முறைக்கேட்டை எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்றும் சைதை துரைசாமி சவால் விடுத்துள்ளார்

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:

அரசியலில் எந்த அணியிலும் இல்லாமல் கல்வி சேவையில் மட்டும் கவனித்துக் கொண்டு வருகிறேன். அத்துடன் மத்திய, மாநில அரசுப்பணிக்கான தேர்வுக்கு பயிற்சி அளித்துள்ளேன். இதுவரை சுமார் 3 ஆயிரம் பேர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர்.  அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் திறந்த புத்தகமாகச் செயல்படும் என் மீது, தொடர்ந்து ஸ்டாலின் குற்றசாட்டினை கூறிவருகிறார்.   

என் மீது வருமான வரித்துறை ரெய்டு நடக்கவே இல்லை என்றாலும், நடந்ததாக மீண்டும் மீண்டும் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். இனியும் அவதூறாக பொய் பேசவேண்டாம் என்று ஸ்டாலினுக்கு 3 முறை எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளேன். மீண்டும் அவர் பொய் பேசுவதைக் கேட்கும்போது திட்டமிட்டு என் மீது களங்கம் சுமத்தி வருவது உறுதியாகிறது.

நான் மேயராக 5 ஆண்டு காலம் நேர்மையாக பணியாற்றியபோது, ஸ்டாலின் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள், குறைகளை ஆதாரப்பூர்வமாக மாநகராட்சி மன்றத்தில் எடுத்துரைத்தேன். மேயராக நான் செய்த பணிகளையும் அவர் செய்த பணிகளையும் ஒப்பீடு செய்து அவரது செயலற்ற பணிகளை அம்பலப்படுத்தினேன். அதேபோன்று கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து தான் போட்டியிட்டேன். அப்போது மு..ஸ்டாலின் வெற்றி பெறுதவற்காக பணம் விநியோகம், அதிகார தூஷ்பிரயோகம் போன்றவற்றில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. தான் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டேன். ஸ்டாலின் வெற்றி செல்லாது என்று தான் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த காரணங்களால்தான் ஸ்டாலின் என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்லி எனக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார்

மீண்டும் மீண்டும் என் மீது அவதூறு கூறிவரும் ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன். அவர், தொடர்புடைய ஊழல் புகார்களை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்துக்கும் நான் தள்ளப்பட்டுள்ளேன்.

முதல் கட்டமாக, ஸ்டாலினிடம் 3 கேள்விகள் மட்டும் முன்வைக்கிறேன். சேகர்ரெட்டிக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பணத் தொடர்பு உண்டா, இல்லையா..? உங்களுக்கும் சேகர் ரெட்டிக்கும் நட்பு இருக்கிறதா, இல்லையா? ரெட்டிக்கும் ரெட் ஜெயண்ட் பட நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

2ஜி ஊழல் புகழ், ஸ்வான் நிறுவன அதிபர் சாகித் பால்வாவை, நீங்கள் 2 முறை சந்தித்து கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் கைமாறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினீர்களா இல்லையா? நீங்கள் பால்வாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை சி.பி.ஐயிடம் வாக்குமூலம் கொடுத்த சாதிக் பாட்சா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தச் சொல்வீர்களா?

ரூ.22 கோடி மதிப்புள்ள ஹம்மர் சொகுசு கார் இறக்குமதியில் உங்கள் மகன் உதயநிதி மற்றும் அழகிரி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக, சி.பி.. உங்கள் வீட்டிலும் அழகிரி பண்ணை வீட்டிலும் ரெய்டு நடத்தியதா இல்லையா? அந்த ஹம்மர் கார் எப்படி உதயநிதியிடம் வந்து சேர்ந்தது? ஸ்டாலின் உடனடியாக பதில் சொல்ல வேண்டும்.

வருமான வரித்துறை என்னிடம் ரெய்டு நடத்தி, நான் முறைகேடாக பணம் சம்பாதித்திருக்கிறேன் என்ற குற்றச்சாட்டை நிரூபித்தால், தான் பொதுவாழ்வில் இருந்து வெளியேறுகிறேன். அதேபோன்று, சேகர் ரெட்டிக்கும் ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் பணத்தொடர்பு உள்ளது என்பது உறுதியானால் ஸ்டாலினை என்ன செய்யப் போகிறீர்கள்?.

தமிழக மக்களுக்கான தலைமைப்பண்பிற்கு தகுதியில்லாத மு..ஸ்டாலின் தன்னை தற்பொழுதே முதல்வர் என நினைத்துக் கொண்டுள்ளார். அவருக்கு அதற்கான தகுதி இல்லை என கூறுகிறேன். மு..ஸ்டாலின் எப்போதும் தனது மீதான முறைக்கேட்டை விவாதிக்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.