Home தமிழகம் ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலில் திருத்தேரோட்டம்

ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலில் திருத்தேரோட்டம்

12
0
SHARE

திருமலை, நவ. 23&

திருமலையில் உள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் கோவிலில் திருத்தேரோட்டம் நடைப்பெற்றது.

திருச்சானுர் ஸ்ரீபத்மாவதி தாயார் ஆலயத்தில் வருடாந்திர பிரமோற்சவத்தின் ஒரு பகுதியாக 7&வது நாளான நேற்று முன்தினம் இரவு ஸ்ரீஅலமேல்மங்கை தாயார் ஸ்ரீமன் நாராயணன் திருக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டார்.

முதலை வாயில் சிக்கிய கஜேந்திரன் எனும் யானையை காப்பற்ற கையில் சக்கரம் ஏந்திய நாராயணன் அலங்காரத்தில் தனது சகோதரனாக கருதப்படும் சந்திர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். அதைத் தொடர்ந்து பிரமோற்சவத்தின் 8&வது நாளான நேற்று திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. காலையில் உற்சவ தாயார் சர்வ அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார்.

பக்தர்கள் கோவிந்த நாமம் சொல்லியபடி தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தாயார் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு திருக்காட்சி தந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here