Home தமிழகம் தாம்பரம் காவல் நிலையத்தில் போலீசாரின் பணிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தாம்பரம் காவல் நிலையத்தில் போலீசாரின் பணிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

16
0
SHARE

தாம்பரம், நவ. 23&

சென்னையை அடுத்த தாம்பரம் காவல் நிலையத்தில் போலீசாரின் பணிகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நடைபெறும் பணிகள், போலீசார் பணியாற்றும் முறை, போலீசாரிடம் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு போலீசாரின் அன்றாட பணிகள் குறித்து நேரில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

தாம்பரம் போலீஸ் நிலையத்தில் 2 பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் ஈஸ்வரன், பள்ளி மாணவர்களை வரவேற்றார்.

பின்னர் போலீசாரின் பணிகள் மற்றும் குற்ற செயல்களை தடுப்பது எப்படி? போலீசார் வயர்லெஸ் மூலம் தகவல்களை தெரிவிப்பது, குற்ற செயல்கள் நடைபெற்றால் போலீசை அணுகுவது எப்படி? போலீசாரிடம் எந்த தயக்கமும் இல்லாமல் நண்பர்களை போல நல்லுறவு பேணுவது குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். பின்னர் காவல் நிலையங்களில் போலீசார் பயன்படுத்தும் ஆயுதங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடாமல் சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது கூட சாலை விதிகளை மீறாமல் நடந்து கொள்ள வேண்டும் என உதவி கமிஷனர் ஈஸ்வரன், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here