Home விளையாட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஓட்ட பயிற்சி உசேன் போல்ட் வழங்கினார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஓட்ட பயிற்சி உசேன் போல்ட் வழங்கினார்

15
0
SHARE

சிட்னி, நவ.22&

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு, உசேன் போல்ட் ஓட்ட பயிற்சி அளித்தார்.

ஜமைக்காவைச் சேர்ந்த பிரபல தடகள நட்சத்திரம் உசேன் போல்ட்.  நூறு மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற தடகள போட்டிகளுக்குப் பின்னர் தடகளத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில், உசேன் போல்ட்டின் ஒட்டம்  ஆஸி., அணியின் பயிற்சிக்கு கை கொடுத்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பிரபலமான ஆஷஸ் டெஸ்ட் போட்டித் தொடர், இன்று (புதன்கிழமை) முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உசேன் போல்ட் ஓட்ட பயிற்சி அளித்தார்.

போட்டியின் போது விக்கெட்களுக்கு இடையே ஓடி ரன் குவிப்பது தொடர்பாக உசேன்போல்ட் கொடுத்த ஆலோசனைகளும், பயிற்சிகளும் வீரர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.” என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here