Home இந்தியா தாஜ்மஹாலை இழந்துவிட்டால் மீண்டும் கிடைக்காதுஉச்சநீதிமன்றம் வேதனை

தாஜ்மஹாலை இழந்துவிட்டால் மீண்டும் கிடைக்காதுஉச்சநீதிமன்றம் வேதனை

10
0
SHARE

புதுடெல்லி, நவ. 22&

தாஜ்மஹாலை இழந்துவிட்டால் மீண்டும் கிடைக்காது என உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள, உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ் மஹால், வாயு கழிவுகளால் மாசு அடைவதில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, எம்.சி.மேத்தா என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தாஜ் மஹாலின் அருகில் சுமார் ஒரு கி.மீ. சுற்றளவுக்கு உள்ள ஆக்கிரமிப்புகளை, அக்டோபர் 27ஆம் தேதி அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி, தாஜ் மஹாலின் கிழக்கு நுழைவாயிலில் கட்டப்பட்டு வரும் பன்னடுக்கு கார் நிறுத்துமிடங்கள் இடிக்கப்பட வேண்டும் எனஉத்தரவிட்டது .இதனிடையே, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை பரிசீலிக்கக் கோரி, உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்தமனு, நீதிபதி ஜெ.செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு பரிசீலனைக்கு வந்தது.

அப்போது, உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஐஸ்வர்யா பாடி, வாகன நிறுத்துமிடத்தை இடிக்குமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவால், உத்தரப் பிரதேச மாநிலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி மதன் பி.லோக்குர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசு வழக்குரைஞரால் ஆஜராக இயலவில்லை.

எனவே, இந்த மனுவை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா பாடி கோரிக்கை விடுத்தார்.அதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசின் மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், தாஜ்மஹாலில் கிழக்கு வாயில் அருகில் பன்னடுக்கு கார்பார்க்கிங் கட்டுவது தொடர்பான வழக்கு  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லாகூர் மற்றும் தீபக் குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒன்றரை கிலோ மீட்டர்தூரத்திற்கு அப்பால் கார் பார்க்கிங் கட்டடத்தை கட்டுமாறும் அதுவரை சுற்றுலாப் பயணிகள் நடந்தே வரட்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் தாஜ் மஹால் அமைந்துள்ள பகுதியில் 500 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் வாகன போக்குவரத்துக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ் மஹாலை சுற்றுப்புற சீர்கேட்டிலிருந்து பாதுகாக்க நீண்டகாலத் திட்டம் எதையும் உத்திர பிரதேச அரசு முன்னெடுக்கவில்லை எனவும் அதுவே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் எனவும் தெரிவித்த நீதிபதிகள், தாஜ்மஹாலை ஒருமுறை இழந்துவிட்டால் மீண்டும் கிடைக்காது எனவும் கவலை தெரிவித்தனர்.மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here