Home அரசியல் தமிழக அமைச்சரவையில் மாற்றம் துணை முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் துணை முதல்வரானார் ஓ. பன்னீர்செல்வம்

19
0
SHARE

சென்னை, ஆக. 22& அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் நேற்று மாலை மாற்றம் செய்யப்பட்டது. துணை முதலமைச்சராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி என்றும் ஈ.பி.எஸ். அணி என்று பிரிந்து இருந்தது. டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டுவரும் நிலையில் நேற்று மாலை ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ் அணியினர் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இணைந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அணிகள் இணைப்புக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் மற்றும் நிதி மற்றும் வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சி, குடிசைமாற்றுவாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ம.பா. பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, பள்ளிக்கல்விதுறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் இனி பள்ளிக்கல்வித்துறையை மட்டுமே கவனிப்பார். பாலகிருஷ்ண ரெட்டியிடம் இருந்த கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணரெட்டி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சேவூர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலைத்துறையை

கவனிப்பார். மீன்வளத்துறையை அமைச்சர் ஜெயக்குமார் கவனிப்பார்.

அமைச்சர் எம்சி. சம்பத்திடம் இருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை கூடுதல் பொறுப்பாக அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை 4.30 மணிக்கு ஆளுனர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலாளர் கிரிஷா வைத்தியநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர். மாலை 4.49க்கு துணை முதல்வராக ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆளுனர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்துவைத்தார். ஒ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்றுகொண்டார்.

இதனை தொடர்ந்து மஃப பாண்டியராஜன் 4.54 க்கு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சராக ஆளுனர் அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். பாண்டிராஜன் அமைச்சராக பதவியேற்று கொண்டார். பின்னர் ஆளுனருக்கு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பூங்கொத்து தந்து வாழ்த்து தெரிவித்தார். பதவியேற்பு விழா முடிந்ததும் ஆளுனர் வித்யாசாகர் ராவ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இரு கைகளை பிடித்து கைகுலுக்கவைத்தார்.