Home உலகம் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் ரோகிங்யா முஸ்லிம்களை திரும்ப பெற ஒப்பந்தம் ஆங் சாங் சூகி...

வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் ரோகிங்யா முஸ்லிம்களை திரும்ப பெற ஒப்பந்தம் ஆங் சாங் சூகி தகவல்

16
0
SHARE

நைப்யீடாவ், நவ.22& வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள, ரோகிங்யா அகதிகளை திரும்ப பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளதாக மியான்மர் நாட்டின் தேசிய தலைவர் ஆங்சாங் சூகி தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதம் மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோகிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்க தேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

மியான்மரில் ரோகிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் உள்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையில் மியான்மர் அரசின் தலைமை ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்து, ரக்கினே மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் மியான்மர் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பேசும்போது, ”ரோகிங்யா அகதி விவகாரத்தில் நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தினார்.

முன்னதாக அவர் அந்நாட்டின் ராணுவ அதிகாரிகளை சந்தித்தும் பேசினார். இந்த நிலையில், வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோகிங்கியா அகதிகளை திரும்ப பெறுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆசிய ஐரோப்பிய கூட்டமைப்பின் உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின்னர் ஆங்சாங் சூகி பேசும்போது, ”இவ்விவகாரம் (ரோகிங்யா அகதிகள் பிரச்சினை) தொடர்பாக, வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இது புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருக்கும்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here