Home தமிழகம் திருவொற்றியூர் பகுதியில் கடல் அரிப்பு ஏற்படும் இடங்களை சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு

திருவொற்றியூர் பகுதியில் கடல் அரிப்பு ஏற்படும் இடங்களை சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு

9
0
SHARE

சென்னை, நவ.22 சென்னை, திருவொற்றியூர் பகுதியில்,  கடலரிப்பு ஏற்படும் இடங்களை,  சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் பார்வையிட்டனர்.

தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் தலைமையில்,   நேற்று திருவொற்றியூர்,  பாரதியார் நகர் பகுதியில் ஏற்படும் கடலரிப்பை பார்வையிட வந்தனர். பின்னர், கடற்கரையில் ஆய்வு நடத்தினர்.  கடலரிப்பை தடுப்பதற்கு, அங்கு  கற்களை கொட்டி  ,தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக,.எம்.எல்..கே.பி.பி.சாமி சட்டமன்ற  மதிப்பீட்டு குழுவினருக்கு விளக்கி கூறினார். கடலரிப்பு தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டபின்,   பி.எம்.நரசிம்மன் நிருபர்களிடம் கூறியதாவது.தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு திருவள்ளுர் மாவட்டத்தில், அரசின் திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வந்தள்ளோம். திருவொற்றியூர் பகுதியில் கடலரிப்பை தடுப்பதற்கு,  அரசு ரூ.20கோடி ஒதுக்கியுள்ளது. மீனவர்களுக்கு ரூ.767 கோடி செலவில்,  பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. மாவட்டத்தின் பிற பகுதிகளையும் பார்வையிட்டு  ,ஆலோசனை நடத்தி அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்புவோம் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here