Home இந்தியா கே.ஜே. ஜேசுதாஸ் குரலில் ஹரிவராசனம் மீண்டும் ஒலிப்பதிவு தேவசம்போர்டு தகவல்

கே.ஜே. ஜேசுதாஸ் குரலில் ஹரிவராசனம் மீண்டும் ஒலிப்பதிவு தேவசம்போர்டு தகவல்

13
0
SHARE

திருவனந்தபுரம், நவ.21& கானகந்தர்வன் கே.ஜே. ஜேசுதாஸ் குரலில், ஹரிவராசனம் பாடல் மீண்டும் ஒலிப்பதிவு செய்யப்பட உள்ளது.

சபரிமலை ஐய்யப்பன் கோவில் தேசவசம் போர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சமீபத்தில் பொறுப்பேற்றனர். இந்த நிலையில், சில திருத்தங்களோடு ஹரிவராசனம் பாடலை மீண்டும் ஒலிப்பதிவு செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது. ‘ஹரிவராசனம்’ பாடல் வரிகளில் ‘ஹரிவராசனம் ஸ்வாமி விஸ்வமோகனம்’ என்பதுபோல ஒவ்வொரு வார்த்தைக்கு நடுவிலும் ‘ஸ்வாமி’ என்ற சொல் இடம்பெறும். ஆனால், ஜேசுதாஸின் குரலில் சன்னிதானத்தில் ஒலிக்கும் பாடலில் ‘ஸ்வாமி’ என்ற வரிகள் இடம்பெறவில்லை. ஹரிவராசனம் விஸ்வமோகனம் என்று தொடங்குகிறது.

எனவே, ‘ஸ்வாமி’ என்பதையும் சேர்த்து ஜேசுதாஸ் குரலில் மீண்டும் ஒலிப்பதிவு செய்ய இருப்பதாக தேவசம் போர்டின் தலைவராக ஒரு வாரம் முன்பு பொறுப்பேற்றுள்ளர் பத்மகுமார் கூறியுள்ளார். மேலும், பாட்டின் நடுவில் ‘அரிவிமர்த்தனம்’ என்று யேசுதாஸ் சேர்த்துப் பாடியிருப்பார். ‘அரி’ என்றால் எதிரிகள். ‘விமர்த்தனம்’ என்றால் அழிப்பது. எனவே, இது தனித்தனி வார்த்தைகளாக ‘அரி விமர்த்தனம்’ வரவேண்டும். இதையும் திருத்த முடிவு செய்துள்ளோம். இந்த பாடல் வருகிற 30&ந் தேதி, ஜேசுதாசின் குரலில் மீண்டும் ஒலிப்பதிவு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.